சித்தராமையா Vs சிவக்குமார்.. அடுத்த கர்நாடக முதல்வர் யார் தெரியுமா?

First Published May 15, 2023, 7:18 PM IST

கர்நாடக முதல்வராக சித்தராமையா அல்லது சிவக்குமார் இருக்கலாம் அல்லது  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை முதல்வர்கள் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனிடையே கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர்  டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது.  புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைமைப் பிரச்சினையில் முடிவெடுப்பதற்கு முன், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கும் அளவுக்கு சீனியாரிட்டி, அனுபவம் மற்றும் பிரபலம் தனக்கு இருப்பதாக சித்தராமையா வலியுறுத்தினார்.

இதையும் படிங்க..கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்

2018 ஆம் ஆண்டு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தோல்வியடைந்த பின்னர், 8 முறை எம்.எல்.ஏ-வாக இருந்ததால், முதல்வராக பதவியேற்கும் அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருப்பதாக கேபிசிசி தலைவராக சிவகுமார் வாதிட்டார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட, குருபாக்கள் மட்டுமின்றி, அனைத்து ஓபிசி, தலித் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவு தனக்கு இருப்பதாக சித்தராமையா தனது வாதத்தை வைத்தார்.

ரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோருக்கு தலா 30 மாதங்கள் பதவிக்காலம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் முதல் பாதியில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதால் சில தடைகளை சந்தித்துள்ளது.

சிவக்குமார் துணை முதல்வராகப் பதவியேற்கலாம் என்றும், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்பார் என்றும் உறுதியளிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸை வலுவாக ஆதரித்த சில முக்கிய சமூகங்களின் பிரதிநிதிகளுக்கு இடமளிக்க குறைந்தபட்சம் மூன்று துணை முதல்வர்களாவது இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க..புதிய வழித்தடத்தில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?

click me!