ஜனசக்தி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களும் சிற்பங்களும் பிரதமரின் மன் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
துப்புரவு, நீர் பாதுகாப்பு, விவசாயம், விண்வெளி, வடகிழக்கு மாநிலங்கள், பெண் சக்தி, யோகா, ஆயுர்வேதம் போன்ற பல கருப்பொருள்களில் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள் படைத்த ஓவியங்களும் சிற்பங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் நடத்தும் இந்த ஜன சக்தி கண்காட்சிக்கு மனு மற்றும் மாதவி பரேக், அதுல் தோடியா, பரேஷ் மைதி, இரன்னா ஜி.ஆர், ஜெகநாத் பாண்டா உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்களித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் மன் கீ பாத் மாதாந்திர வானொலி உரையின் 100வது எபிசோடு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஒலிபரப்பானது. அதனை முன்னிட்டு மன் கீ பாத் உரை குறித்து கருத்தரங்குகள், கண்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.