சண்டை போட்ட மனைவியை சமாதானப்படுத்த லிப்கிஸ் கொடுத்த கணவர்... ஆத்திரத்தில் கணவரின் நாக்கை பதம்பார்த்த மனைவி

Published : Jul 23, 2023, 12:32 PM IST

மனைவி உடனான சண்டைக்கு முடிவுகட்ட ஆசையோடு உதட்டு முத்தம் கொடுத்த கணவரின் நாக்கை மனைவி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
சண்டை போட்ட மனைவியை சமாதானப்படுத்த லிப்கிஸ் கொடுத்த கணவர்... ஆத்திரத்தில் கணவரின் நாக்கை பதம்பார்த்த மனைவி

அன்பின் வெளிப்பாடு தான் முத்தம். இப்படிப்பட்ட முத்தத்தில் பலவகை உள்ளது. முத்தம் கொடுப்பதால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக ஆய்வுகளும் சொல்கின்றன. இப்படி முத்தத்தால் பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்தாலும், அது ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசையோடு மனைவிக்கு முத்தம் கொடுக்கப்போன கணவருக்கு தான் ஆந்திராவில் ஒரு சோகச் சம்பவம் நடந்து இருக்கிறது.

24

ஆந்திர  மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள எல்லமகுட்டா தண்டா என்கிற கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு வசித்து வந்த சந்து நாயக் என்பவருக்கும் அவரது மனைவி புஷ்பாவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை வருமாம். அப்போதெல்லாம் மனைவியை சமாதானப்படுத்த லிப்கிஸ் கொடுப்பாராம் சந்து நாயக். அடிக்கடி இப்படி லிப்கிஸ் கொடுப்பது புஷ்பாவதிக்கு பிடிக்கவில்லையாம். இருந்தாலும் அவரது விருப்பதிற்கு மாறாக லிப்கிஸ் கொடுத்து வந்திருக்கிறார் சந்து நாயக்.

இதையும் படியுங்கள்... வடகிழக்கிலிருந்து காஷ்மீர் வரும் சுற்றுலா பயணிகள்.. அதிகரிக்கும் எண்ணிக்கை - எல்லாம் அந்த இயற்கையை கொஞ்சத்தான்

34

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சந்து நாயக்கிடம் வழக்கம்போல் சண்டை போட்டிருக்கிறார் புஷ்பாவதி. இதையடுத்து சமாதானப்படுத்த தான் நம்ம கிட்ட ஐடியா இருக்கேனு, ஆசையோடு லிப்கிஸ் கொடுக்க சென்றிருக்கிறார் சந்து நாயக். குடிபோதையில் தனக்கு லிப்கிஸ் கொடுத்ததால் ஆத்திரமடைந்த புஷ்பாவதி, அவரது கணவர் சந்து நாயக்கின் நாக்கை நன்கு கடித்துவிட்டாராம். இதனால் துடிதுடித்துப் போன சந்து நாயக் வாயில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்.

44

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து புஷ்பாவதியை அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். தொடர்ந்து தனக்கு வலுக்கட்டாயமாக லிப்கிஸ் கொடுத்ததன் காரணமாகவே கணவரின் நாக்கை கடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த செய்தி வெளியாகி இணையத்தில் வைரலானதை பார்த்த நெட்டிசன்கள், முத்தத்தால் கணவன், மனைவிக்கு இடையே இப்படி ஒரு யுத்தமா என கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பஞ்சாபில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை வீசும் பாகிஸ்தான்!

click me!

Recommended Stories