தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கள்ளக்காதல் விவகாரத்தில் நடக்கும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி பகுதியை சேர்ந்தவர் கிராந்தி(25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கிராந்தி வீட்டில் பழுதாகி கிடந்த ஏசியை சரி செய்ய ஷேக் அகமத்(27) வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.