Train : இந்தியாவில் இப்படி ஒரு ரயிலா? 3 வேளையும் சுடச்சுட சாப்பாடு ஃப்ரீ!

Published : Jun 13, 2026, 02:21 PM IST

Train Offering Free Food : இந்தியாவில் ஓடும் ஒரு சிறப்பு ரயில் தன் பயணிகளுக்கு காலை உணவு முதல் இரவு உணவு வரை எல்லாவற்றையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. அந்த ரயில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Free Meals Train

நாட்டின் உயிர்நாடின்னு சொல்ற இந்தியன் ரயில்வே, தினமும் சுமார் 2.5 கோடி மக்களை அவங்க சேர வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் சேர்க்குது. சூப்பர்ஃபாஸ்ட் முதல் சொகுசு ரயில்கள் வரை 13,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த பெரிய நெட்வொர்க்கில் ஓடுது. ஆனா, இந்த ஆயிரக்கணக்கான ரயில்களில் ஒரு ரயில் மட்டும் ரொம்பவே ஸ்பெஷல். நிறைய பேருக்கு இந்த ரயிலைப் பற்றி தெரிந்திருக்காது. மூன்று வேலையும் இலவசமாக உணவு வழங்கும் ஒரு ரயில் இந்தியாவில் இயங்குகிறது. அந்த ரயிலைப் பற்றி தான் பார்க்க உள்ளோம்.

IRCTC Lower Berth Tips: ரயிலில் லோயர் பெர்த் வேண்டும் என்றால் இதை செய்யுங்க.. ஐஆர்சிடிசி சீக்ரெட் டிப்ஸ்

24
Free food in Sachkhand Express

அந்த ரயிலின் பெயர் சச்கண்ட் எக்ஸ்பிரஸ் (Sachkhand Express), வண்டி எண் 12715. பயணத்தின்போது பயணிகளுக்கு காலை உணவு முதல் இரவு உணவு வரை எல்லாவற்றையும் இலவசமாக வழங்கும் ஒரே இந்திய ரயில் இதுதான். இந்த சிறப்பு ரயில், நாட்டின் இரண்டு முக்கிய மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கிறது. ஒன்று, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் (பொற்கோயில்). மற்றொன்று, மகாராஷ்டிராவின் நாந்தேடில் உள்ள ஸ்ரீ ஹஜூர் சாஹிப் குருத்வாரா.

34
உணவுகளை வழங்க தனி ஏற்பாடு

இந்த ரயில் கடந்த 29 ஆண்டுகளாக இந்த இரண்டு புனித தலங்களுக்கும் இடையே சீக்கிய பக்தர்கள் மற்றும் பிற பயணிகளை ஏற்றிச் செல்கிறது. பயணம் முழுவதும் இலவசமாக உணவு வழங்குகிறது. மற்ற ரயில்களில் பயணிகள் உணவுக்காக பணம் செலுத்த வேண்டும். ஆனால், சச்கண்ட் எக்ஸ்பிரஸில் இந்த சேவை முற்றிலும் இலவசம்.

சச்கண்ட் எக்ஸ்பிரஸ் சுமார் 33 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2,000 கி.மீ தூரத்தைக் கடக்கிறது. இந்த பயணத்தின்போது 39 ரயில் நிலையங்களில் நிற்கும். பயணத்தின்போது, 6 முக்கிய ஸ்டேஷன்களில் பயணிகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஸ்டேஷன்களில் புது டெல்லி, போபால், பர்பானி, ஜல்னா, அவுரங்காபாத் மற்றும் மராத்வாடா ஆகியவை அடங்கும். பயணிகள் நிதானமாக சாப்பிடும் வகையில் ரயிலின் நேரம் திட்டமிடப்பட்டுள்ளது.

44
விதவிதமான மெனு

சாப்பாட்டு மெனு ஒவ்வொரு முறையும் மாறும். ஆனால் பொதுவாக கடி-சாதம், சோலே-சாதம், பருப்பு, கிச்சடி மற்றும் உருளைக்கிழங்கு-காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் வழங்கப்படும். இந்த முழு சேவைக்கான செலவையும் குருத்வாராக்கள் பெறும் நன்கொடைகள் மூலம் ஈடுகட்டுகின்றனர். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த புனித உணவு சேவையைப் பெற, சாதாரண கோச்சுகள் முதல் ஏசி கோச்சுகள் வரை உள்ள பயணிகள் தங்கள் சொந்த பாத்திரங்களை எடுத்து வருகிறார்கள். இந்த ரயில் வெறும் போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் சேவையின் நகரும் சின்னம்.

Read more Photos on
click me!

Recommended Stories