ரயில்களில் வழங்கப்படும் உணவு! மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்! பயணிகளுக்கு இனி கவலையில்லை!

Published : Mar 14, 2025, 08:23 AM IST

ரயில்களில் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
ரயில்களில் வழங்கப்படும் உணவு! மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்! பயணிகளுக்கு இனி கவலையில்லை!

Train Food Menu: இந்தியன் ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆக உள்ளது. தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சாதாரண பயணிகள் ரயில் முதல் வந்தே பாரத் வரையிலான அதிவேக சொகுசு ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான ரயில்களில் உள்ளேயே கேட்டரிங் ([பேன்ட்ரி கார்) அமைக்கப்பட்டு பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
 

24
ரயில்களின் உணவுப்பட்டியல்

குறிப்பாக தொலைதூரங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் வசதி உள்ளது. இந்நிலையில், பேன்ட்ரி கார்களில் உணவுப் பட்டியல் விலையுடன் காட்டப்பட்டுள்ளதாகவும், இந்திய ரயில்வேயில் உணவுப் பட்டியல் மற்றும் கேட்டரிங் சேவைகளின் கட்டணங்கள் குறித்து பயணிகளுக்குத் தெரியப்படுத்த, மெனு மற்றும் கட்டண இணைப்புடன் SMS அனுப்பும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

ரயில் பயணிகளின் தகவலுக்காக ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் அனைத்து உணவுப் பொருட்களின் மெனுவும் கட்டணங்களும் கிடைக்கின்றன. அனைத்து விவரங்களுடனும் அச்சிடப்பட்ட மெனு அட்டைகள் பணியாளர்களிடம் கிடைக்கச் செய்யப்பட்டு, தேவைக்கேற்ப பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன" நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.

நாட்டின் முதல் சைவ உணவு ரயில்! அசைவம் விற்கவும் வைத்திருக்கவும் தடை!

34
இந்தியன் ரயில்வே

மெனு கார்டு, உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் மற்றும் ரயில்களில் சுகாதாரம், தூய்மை மற்றும் உணவின் தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய வைஷ்ணவ், சமையலறைகளிலிருந்து தரமான உணவு வழங்கல், அடையாளம் காணப்பட்ட இடங்களில் நவீன அடிப்படை சமையலறைகளை இயக்குதல் மற்றும் உணவு தயாரிப்பை சிறப்பாகக் கண்காணிக்க சமையலறைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுதல் ஆகியவை எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளில் அடங்கும் என்று தெரிவித்தார்.

44
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

''சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், பனீர், பால் பொருட்கள் போன்ற பிரபலமான மற்றும் பிராண்டட் மூலப்பொருட்களின் பயன்பாடு, அவற்றின் தரம் ஆகியவை உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். ரயில்களில் ஐஆர்சிடிசி மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், உணவுப் பொட்டலங்களில் கியூஆர் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

''பேன்ட்ரி கார்கள் மற்றும் பேன்ட்ரி கார்களில் சுகாதாரம் மற்றும் உணவின் தரத்தை ஆராய மூன்றாம் தரப்பு தணிக்கை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு கேட்டரிங் பிரிவின் நியமிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது'' என்றும் அஸ்வினி வைஷ்ணவ்  கூறியுள்ளார்.

இனி ரயில் டிக்கெட் புக் செய்வது இவ்வளவு ஈஸியா? ரயில்வே குறித்த A to Z தகவல்கள் இதோ!

Read more Photos on
click me!

Recommended Stories