கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இரண்டு நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ராகுல் காந்தி நேற்று டெல்லி திரும்பினார். இதனையடுத்து, நேற்று மாலை ராகுல்காந்தி டெல்லி பெங்காலி மார்கெட் திடீரென சென்று பார்வையிட்டார்.
பின்னர், அங்குள்ள நடைபாதை கடைகளில் ஆலு டிக்கி, பானி பூரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை ராகுல் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார்.
அவரது வருகை கடை வியாபாரிகள் மட்டுமன்றி பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ராகுலை காண அப்பகுதியில் குவிந்த மக்கள் அவருடன் இணைந்து மார்கெட்டில் உள்ள அனைத்து சாலைகளுக்கும் சென்றனர். இதுதொடர்பான போட்டோஸ் வைரலாகி வருகிறது.