ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீஸ்! மூக்கில் ரத்தம் வழிந்ததா? பரபரப்பு தகவல்!

Published : Jul 21, 2026, 08:14 PM IST

Rahul Gandhi Arrested: டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி போராட்டம் நடத்திய ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். அவர் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.

PREV
13
டெல்லியில் ராகுல் காந்தி பெரும் போராட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க் அருகே போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ராவை டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர். NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரதமர் அலுவலகம் முன்பு தர்ணா

தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நேற்று டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்தும், ‍பிரதமர் மோடி மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் பெரும் போராட்டம் நடத்தினார்கள். ராஜாஜி மார்க்கில் இருந்து லோக் கல்யாண் மார்க் வரை பேரணியாக சென்றனர். பின்பு பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

23
ராகுல் காந்தி அதிரடி கைது

தர்ணா போரட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அங்கு இருந்து கலைந்த் செல்ல மறுத்த ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

33
ராகுல் காந்தி முகத்தில் ரத்தம் வழிந்ததா?

காவலர்கள் கைது செய்தபோது ராகுல் காந்தி தரையில் படுத்துக் கொண்டு எழுந்து செல்ல மறுத்தார். இதனால் காவலர்கள் அவரை இழுத்து குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். ராகுல் காந்தியை அந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர். அவரைத் தூக்கிக்கொண்டு பேருந்தில் ஏற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது. 

இதேபோல் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தபோது ராகுல் காந்தி லேசான காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததாக சில செய்தி நிறுவனங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டன.

முன்னதாக கைது செய்யப்படும்போது பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, "அவர்கள் கோழைகள். அவர்கள் பயந்துவிட்டார்கள். நாங்கள் அவர்களுக்குப் பயப்படவில்லை. அவர்கள்தான் எங்களுக்குப் பயப்படுகிறார்கள்" என்று ஆவேசமாக கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories