வயநாடு இடைத்தேர்தல்; தேர்தல் களத்தில் அறிமுகமாகும் பிரியங்கா காந்தி - அவர் அரசியல் வாழ்கை ஒரு பார்வை!

First Published Oct 15, 2024, 10:09 PM IST

Priyanka Gandhi : கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கு, வருகின்ற நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

Priyanka Gandhi

கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி நடைபெறும் என்று இன்று செவ்வாய் கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வயநாடு தொகுதியில் இருந்து தனது முதல் தேர்தல் களத்தில் அறிமுகமாகியுள்ளார். அவரது சகோதரர் ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் இரட்டை வெற்றிகளைப் பெற்றதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியைத் தக்கவைக்க முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழைகளின் பெயரில் நிலத்தை அபகரிப்பதுதான் காங்கிரசின் வேலையே: ராஜீவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!!

Rahul Gandhi

கடந்த ஜூன் மாதம், வயநாட்டில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்தது. அதன் பிறகு ஜூன் 17ம் தேதி அன்று தேசிய தலைநகரில் உள்ள கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூடிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பிரியங்கா காந்தி வத்ரா 1999 முதல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், ஆரம்பத்தில் தனது தாயார் சோனியா காந்திக்காக அமேதியில் பிரச்சாரம் செய்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டு காலமாக அவர் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், அவர் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. 

Latest Videos


Wayanad BY Election

பிரியங்கா காந்தியும் இந்திய அரசியலும் 

கடந்த 1999ம் ஆண்டு முதல், அதாவது தனது 27வது வயது முதல் தனது தாய் சோனியா காந்திக்காக அவர் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் பிரியங்கா காந்தி கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் இந்திய தேசிய காங்கிரஸின் (INC) கிழக்கு உத்தரப் பிரதேசத்திற்கான பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக இணைந்து தீவிர அரசியலில் நுழைந்தார்.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸை புத்துயிர் பெறு வைப்பதில் கவனம் செலுத்தி, 2019 பொதுத் தேர்தலில் பிரியங்கா காந்தி வதேரா குறிப்பிடத்தக்க பங்கைக் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பெண்கள் அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தி காங்கிரஸின் முயற்சிகளை பிரியங்கா காந்தி தீவிரமாக வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸின் தலைமை மற்றும் வியூகங்களில், குறிப்பாக வட இந்திய அரசியலில் பிரியங்கா ஒரு முக்கிய நபராக இருக்கிறார்.

Wayanad Election

47 சட்டமன்ற தொகுதிகளுடன், இடைத்தேர்தல் நடத்தப்படும் ஒரே நாடாளுமன்றத் தொகுதயாக வயநாடு உள்ளதால், பிரியங்கா காந்தி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். வயநாடு மக்களவை இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 47 சட்டமன்ற தொகுதிகளுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் ஒரே நாடாளுமன்றத் தொகுதி வயநாடு ஆகும். வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 25ம் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 30ம் தேதியும், நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதே தேதியில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கும்பமேளாவிற்கு 14 ரத்தினங்களை கொண்ட நுழைவு வாயில்கள்.! முதல்வர் யோகியின் அசத்தல் பிளான்

click me!