நான்-ஸ்டாப் ரயில் தெரியும்; ஆனா இந்தியாவில் அதிக STOPல் நிற்கும் ரயில் எது? எத்தனை ஸ்டாப் தெரியுமா?

First Published | Oct 15, 2024, 7:47 PM IST

Train With More Stops : இந்திய ரயில்வே நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ரயில்களை வழங்குகிறது. மலைகளில் இருந்து, கடல் கரைகள் வரை ரயில் பயணத்தில் நம்மால் பல விஷயங்களை அனுபவிக்கமுடியும்.

Indian Railways

இந்திய ரயில்வே நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ரயில் சேவைகளை அளித்து வருகின்றது. இந்தியாவின் அழகிய மலைகள் முதல் சிறப்பான பாலைவனங்கள் வரை, கடல் கரையிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை, மக்கள் ரயிலில் பயணிக்க முடியும். அதில் சில ரயில்கள் குறுகிய தூர ரயில்களாக உள்ளது. மேலும் பல நீண்ட தூர ரயில்களாக உள்ளது. சில ரயில்கள் நிறுத்தங்கள் எதுமே இல்லாமல் நான் ஸ்டாப்பாக இயங்கும், ஆனால் சில ரயில்களோ அவை பயணிக்கும் பாதையில் உள்ள பல நிறுத்தங்களில் நின்று நின்று தான் செல்லும். இன்று இந்த பதிவில் நாம் காணப்போகும் ரயில், இந்திய நாட்டிலேயே அதிக நிறுத்தங்களைக் கொண்ட ரயில். அதாவது அதன் 37 மணிநேர பயணத்தில், இந்த ரயில் சுமார் 111 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்தியா; எந்த மாநிலத்தில் சூரியன் முதலில் உதிக்கும் தெரியுமா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல் இதோ!

mountain train

ஆம் நீங்கள் வாசித்தது சரி தான், நாட்டில் அதிகபட்ச ரயில் நிலையங்களில் நின்று செல்லும் ரயில் ஒன்று உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் இடையே ஓடும் ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் ரயில் மட்டுமே அதிகபட்ச ரயில் நிலையங்களில் நின்று செல்லும் ரயிலாகும். ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் அதன் பயணத்தின் போது 10, 20, 30 அல்ல, சரியாக 111 நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயில் ஹவுரா மற்றும் அமிர்தசரஸ் இடையேயான 1910 கிமீ தூரத்தை 37 மணி நேரத்தில் கடக்கிறது. மேலும் இந்த பயணத்தின் போது, ​​இந்த ரயில் பாதையில் உள்ள 111 நிலையங்களில் நிற்கிறது.

Tap to resize

Southern railways

ஹவுரா-அமிர்தசரஸ் மெயில், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான நிறுத்தங்களைக் கொண்ட ரயில் மட்டுமல்ல, சரியாக அதன் பயணப்பாதையில் ஐந்து மாநிலங்கள் வழியாக அது செல்கிறது. மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய முக்கிய நகரங்களை கடந்து செல்லும் இந்த ரயில் 111 ரயில் நிலையங்களில் நிற்கிறது. உண்மையில் இத்தனை நிறுத்தங்களில் இந்த ரயில் நிறுத்தப்படுவதால், அப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைகின்றனர். அசன்சோல், பாட்னா, வாரணாசி, லக்னோ, பரேலி, அம்பாலா, லூதியானா மற்றும் ஜலந்தர் போன்ற பிரபலமான நிலையங்களில் அதன் நிறுத்தங்கள் சற்று நீளமாக இருக்கும். அதே நேரத்தில் சிறிய ரயில் நிலையங்களில், அது 1 முதல் 2 நிமிடங்கள் மட்டுமே நிற்கும்.

howrah Amristar mail

ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் ரயிலின் நேர அட்டவணை அதிகபட்ச மக்கள் பயணம் செய்யும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 8:40 மணிக்கு அமிர்தசரஸ் சென்றடைகிறது. இதேபோல், இந்த ரயில் அமிர்தசரஸில் இருந்து மாலை 6:25 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 7:30 மணிக்கு ஹவுரா நிலையத்தை மீண்டும் சென்றடைகிறது. அதிகபட்ச நிறுத்தங்களைக் கொண்ட இந்த ரயிலின் கட்டணமும் சாதாரணமானது. ஹவுரா-அமிர்தசரஸ் மெயிலின் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டின் கட்டணம் ரூ. 695, மூன்றாம் ஏசி ரூ. 1870, இரண்டாவது ஏசி ரூ. 2755 மற்றும் முதல் ஏசி ரூ. 4835 ஆகும்.

இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணை!!

Latest Videos

click me!