சரக்கு அடித்து விட்டு ஒயின் ஷாப்பிலேயே மட்டையான கர்ப்பிணி குரங்கு.. வைரல் வீடியோ!

Published : Sep 26, 2026, 04:02 PM IST

Drunk monkey: மனிதர்களை போன்று அதிகமாக மது குடித்து விட்டு ஓயின்ஷாப்பிலேயே மட்டையாகி விட்டது ஒரு கர்ப்பிணி குரங்கு. இந்த விநோத சம்பவம் தொடர்பாக இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

PREV
14
மது குடித்து விட்டு மட்டையான குரங்கு

இந்தியா முழுவதும் மதுகுடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. இதில் எந்த மாநிலமும் விதிவிலக்கு அல்ல. 'குடி'மகன்கள் மூச்சுமுட்ட குடித்து விட்டு மித மிஞ்சிய போதையில் டாஸ்மாக் பார்களிலும், தெருக்களிலும் சுயநினைவின்றி கிடப்பதை பார்த்திருப்போம். இந்த 'குடி'மகன்களின் பட்டியலில் இணைந்த குரங்கு ஒன்று, மதுக்கடையில் மது குடித்து விட்டு மட்டையாகி கிடக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

24
ராஞ்சியில் நடந்த விநோதமான சம்பவம்

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் புறநகர் பகுதியில் தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்த கர்ப்பிணி குரங்கு ஒன்று, அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியுள்ளது. அதன்பிறகு ஒரு குவாட்டர் வோட்காவை குடித்துவிட்டு, அங்கிருந்த மதுப் பெட்டிகள் மீதே நிம்மதியாக தூங்கிவிட்டது. ராஞ்சியின் ஓர்மாஞ்சி பிளாக் சௌக் அருகே உள்ள அந்த கடையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

34
மதுபான கடைக்குள் புகுந்த குரங்கு

உள்ளூர் மக்களும் கடை ஊழியர்களும் கொடுத்த தகவல்படி, இந்த கர்ப்பிணி குரங்கு முந்தைய நாளே கடைக்குள் நுழைந்துவிட்டது. கடையில் இருந்த ஊழியர் ஒருவரை அது தாக்க முயன்றபோது, அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். கடைக்குள் முகாமிட்டிருந்த அந்த குரங்கு, அங்கிருந்த வோட்கா பாட்டிலை திறந்து சுமார் கால்வாசி அளவுக்கு மதுவை குடித்துள்ளது. சரக்கு அடித்த போதையில், கடையில் இருந்த அட்டைப் பெட்டிகள் மீதே அது ஜாலியாகப் படுத்துத் தூங்கிவிட்டது.

44
வீடியோ வைரல்

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர், பெட்டிகள் மீது அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த குரங்கின் அருகே சென்றார். அப்போது அந்த குரங்கு ஒருமுறை கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டது. அந்த வீடியோவில், குரங்கு குடித்துவிட்டு மீதி வைத்திருந்த வோட்கா பாட்டிலையும் அவர் காட்டியுள்ளார். அந்த குரங்குதான் வோட்காவைக் குடித்தது என்றும் வீடியோ எடுக்கும் நபர் விளக்குகிறார். வீடியோ எடுக்கும்போதும் அந்த குரங்கு கடைக்குள் பெட்டியின் மீது படுத்துத் தூங்கிக் கொண்டுதான் இருந்தது. இந்த விஷயம் வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குரங்கை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

'குடி'மகன்கள் ஜாலியான கமெண்ட்

குரங்கு சரக்கு அடித்து விட்டு மட்டையான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், ''நாங்க தான் இப்படி ஓவரா குடிச்சுட்டு மட்டையாகி கிடப்போம். நீயுமா இப்படி?'' என 'குடி'மகன்கள், நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories