ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ந் தேதி மதியம் பயங்கரவாதிகள் கொடூர தாக்குல் நடத்தினர். இதில் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் கர்நாடகாவின் சிவமோகாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் என்பவரும் கொல்லப்பட்டார். அவர் தன் மனைவி பல்லவி ராவ் உடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானார்.
25
மோடியிடம் போய் சொல் - பல்லவியிடம் சொல்லியனுப்பிய பயங்கரவாதிகள்
மஞ்சுநாத்தை அவரது மனைவி பல்லவி ராவ் கண்முன்னே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். உடனே அவர்களிடம் தன்னையும் தன் குழந்தையையும் இதேபோல் கொன்றுவிடுமாறு பல்லவி ராவ் கெஞ்சி இருக்கிறார். ஆனால் அவர்களை சுட மறுத்த பயங்கரவாதி, பல்லவி ராவிடம் ஒரு தகவல் ஒன்றை கூறிவிட்டு சென்றிருந்தார். அது என்னவென்றால், "உன்னை நாங்க கொல்ல மாட்டோம், போ, போய் மோடியிடம் நடந்ததை சொல்..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். இதனை பல்லவி ராவ் கண்ணீர்மல்க கூறி இருந்தார்.
35
ஆபரேஷன் சிந்தூரை வழிநடத்திய சிங்கப்பெண்கள்
பயங்கரவாதி சொல்லி அனுப்பிய இந்த மெசேஜ் பிரதமர் மோடியை கடுமையாக பாதித்திருக்கிறது. இதனால் அவர்களை பெண்களை வைத்தே பழிவாங்க முடிவெடுத்த மோடி, ஆபரேஷன் சிந்தூர் என்கிற மிஷனை இரண்டு பெண் அதிகாரிகள் மூலம் வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறார். ஆபரேஷன் சிந்தூரை கலோனல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் தான் சக்சஸ்புல்லாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.
சிந்தூர் என்பது பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கும். பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டு இருக்கிறார்கள். பஹல்காம் தாக்குதலுக்கு பின் தங்களை ஒன்னும் செய்ய முடியாது என்கிற தொனியில் சவால்விட்டு சென்ற பயங்கரவாதிகளின் கொட்டத்தை ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அடக்கி இருக்கிறார் பிரதமர் மோடி.
55
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு
ஆபரேஷன் சிந்தூர் இன்று அதிகாலை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தகர்த்துள்ளது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதை பஹல்காம் சம்பவத்தோடு ஒப்பிட்டு, அன்று சவால்விட்ட பயங்கரவாதிகளை, சிங்கப்பெண்களை வைத்து தீர்த்து கட்டி இருக்கிறார் மோடி என்று மீம் உருவாக்கி அதை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.