புதிய ஜம்மு காஷ்மீர்! நனவாகத் தொடங்கிய பிரதமர் மோடியின் நெடுங்காலக் கனவு!

First Published | Dec 11, 2023, 3:51 PM IST

சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, மோடி அரசின் புதிய ஜம்மு காஷ்மீருக்கான பாதையை வடிவமைத்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு புதிய ஜம்மு காஷ்மீரை உருவாக்கும் எனவும் எப்படித் தோன்றியது என்று பார்க்கலாம்.

PM Modi and Jammu Kashmir

மோடி நேரடி அனுபவங்கள் மூலமும் காஷ்மீரின் பிரச்சினைகள் பற்றிய விரிவான புரிதலைக் கொண்டிருந்தார். உதாரணமாக, 1984-85ஆம் ஆண்டு அவர் ஆர்எஸ்எஸ் ஊழியராக இருந்தபோது, புனேவில் உள்ள சங்க ஷிக்ஷா வர்கில் ஆற்றிய உரையில், சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35A ஆகியவற்றில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினார்.

PM Modi and Jammu Kashmir

பின்னர், பாஜக தொண்டராக ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயணம் செய்யும்போது உள்ளூர் மக்களுடன் நேரடியாகப் பழகினார். 1992ல் பாஜக தலைவரான மோடிக்கு ஏக்தா யாத்திரையை ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இது கன்னியாகுமரியில் இருந்து 14 மாநிலங்கள் வழியாகப் பயணித்து காஷ்மீரை அடையும் 45 நாள் பயணமாகும்.

Latest Videos


PM Modi and Jammu Kashmir

அந்த காலத்தில் காஷ்மீரில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதை பயங்கரவாதிகள் எதிர்த்தனர். அப்போதுதான் மோடி ஏக்தா யாத்ராக்கு ஏற்பாடு செய்தார்.  "இந்தப் பயணத்தை யாரும் நிறுத்த முடியாது... காஷ்மீரில் மூவர்ணக் கொடி நிச்சியம் ஏற்றப்படும்" என்று கூறினார்.

PM Modi and Jammu Kashmir

ஜனவரி 23, 1992 அன்று, பக்வாரா அருகே ஏக்தா யாத்திரையில் பங்கேற்றவர்களுடன் காஷ்மீருக்குச் சென்ற பேருந்துகளை பயங்கரவாதிகள் தாக்கினர். இந்தத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். இந்த சோகமான சம்பவம் நடந்தாலும், மோடியின் உறுதி தளரவில்லை.

PM Modi and Jammu Kashmir

அதே 1992 ஆம் ஆண்டு, போபாலில் நடந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில், காஷ்மீர் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அப்போது 1992 செப்டம்பர் 19 முதல் 22 வரை மோடி காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4 நாள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் பாஜக குஜராத் பொதுச் செயலாளர் மதன் லால் குரானா மற்றும் சமன் லால் குப்தா ஆகியோரும் இருந்தனர்.

PM Modi and Jammu Kashmir

1990களில் மோடி குப்வாரா, பந்திபோரா, கந்தர்பால், பாரமுல்லா, புத்காம், ஸ்ரீநகர் மற்றும் ஷோபியான் உட்பட காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் விரிவாகப் பயணம் செய்து, உள்ளூர் மக்களிடையே நிறைய நேரத்தைச் செலவிட்டார்.

PM Modi and Jammu Kashmir

2000ஆம் ஆண்டில், ஸ்ரீநகரில் ஒரு நிகழ்வின் போது, மோடி காஷ்மீர் மாநிலம் பின்தங்கிய நிலையில் இருக்காமல் இருக்க அவர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை என்று கூறினார்.

PM Modi and Jammu Kashmir

மோடி குஜராத்தில் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு, தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சென்று மக்களுடன் நேரடி உறவைப் பேணி வந்தார்.

PM Modi and Jammu Kashmir

2014 மக்களவைத் தேர்தலுக்காக 2013 டிசம்பரில் ஜம்மு காஷ்மீரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட மோடி, சட்டப்பிரிவு 370 மற்றும் பிரிவு 35A காரணமாக SC, ST, OBC மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டைச் சுட்டிக்காட்டினார்.

click me!