நாடாளுமன்ற கட்டடத்திற்குள் வருகை தந்த பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உற்சாகமாக வரவேற்றார்.
டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்தில் போதுமான இட வசதி இல்லாததால், புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்றுள்ளனர். யாக வேள்வி வளர்த்து கணபதி ஹோமத்தோடு இந்த பூஜை நடைபெற்றது.
பூஜையில் செங்கோல் வைத்து பூஜிக்கப்பட்டது. பூஜை முடிந்த பிறகு 20 ஆதினங்கள் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். இதையடுத்து, ஆதினங்களிடம் இருந்து செங்கோலை பெற்று கொண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்றார்.
முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் வருகை தந்த பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உற்சாகமாக வரவேற்றார்.
பிரதமர் மோடி ஆதீனங்களிடம் வாங்கிய செங்கோலை மக்களவையில், சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார். அருகில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.