முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ம் ஆண்டு நினைவுதினம் வரும் 21-ம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ராகுல் காந்தி பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார்.