இப்படி ராயலசீமால இருக்குற கர்நூல், அனந்தபூர் மாவட்டங்கள்ல வைரங்களுக்காக மக்கள் நிலங்கள்ல தேடுறதைப் பார்க்க முடியும். முக்கியமா கர்நூல் மாவட்டம் துக்லி, ஜொன்னகிரி, மத்திகெரா, பகிடிராய், பெரவலி மண்டலங்கள்ல வைர வேட்டை நடக்குது. அதே மாதிரி அனந்தபூர் மாவட்டத்துல இருக்குற வஜ்ரக்கூர், எம்மி கனூர், கோசி மண்டலங்கள்லயும் நிலங்கள்ல விலை உயர்ந்த வைரங்கள் கிடைக்குது. இதனால மழைக்காலம் ஆரம்பிச்சு தூறல் மழை பெய்ய ஆரம்பிச்சா, இந்தப் பகுதிகள்ல நிலங்கள்ல வைரங்களைத் தேடுறது ஒரு பாரம்பரியமா மாறிடுச்சு.