OYO Rooms Scam: ஓயோவில் இத்தனை கோடி மோசடியா? அதிர வைக்கும் தகவல்கள்!
உலகம் முழுவதும் பிரபலமான ஓயோவில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஓயோ ரூம்ஸில் நடந்த அந்த மோசடி என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
உலகம் முழுவதும் பிரபலமான ஓயோவில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஓயோ ரூம்ஸில் நடந்த அந்த மோசடி என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
OYO Rooms Scam: ஓயோ ஹோட்டல் நிறுவனம் உலகம முழுவதும் பிரபலமாக விளங்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்காண மக்கள் ஓயோ ரூம்ஸ்களை புக்கிங் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஓயோ நிறுவனத்தில் ரூ.22 கோடி மோசடி நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. போலியான புக்கிங் பெயரில் ஓயோ பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஓயோ உரிமையாளர் ரித்தேஷ் அகர்வால் மீது ரூ.22 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓயோ செய்த மோசடி என்ன?
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சில ஹோட்டல் உரிமையாளர்கள் ஓயோ மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஓயோ தங்கள் ஹோட்டல்களில் போலியான புக்கிங் செய்து பணம் சம்பாதித்ததாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. ஓயோ தவறான முறையில் ஹோட்டல்களை புக் செய்வதன் மூலம் தனது வருமானத்தை அதிகரித்துக் கொண்டது. இதன் காரணமாக ஹோட்டல்கள் கடுமையாக நஷ்டமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி; பெல்ஜியத்தில் மெகுல் சோக்சி கைது!!
ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால்
இந்த விஷயம் குறித்து ஹோட்டல் பெடரேஷன் ஆஃப் ராஜஸ்தான் தலைவர் ஹுசைன் கான் கவலை தெரிவித்துள்ளார். இது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது என்றார். ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் மீது ஒரு ஹோட்டல் நிர்வாகி ரூ.22 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோத்பூரில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி இருந்து நோட்டீஸ்கள் வந்துள்ளன.
மோசடி எப்படி நடக்கிறது?
ஓயோ மூலம் ஹோட்டல்களை முதலில் ஆன்லைனில் புக் செய்து, சிறிது நேரம் கழித்து ரத்து செய்வதாக ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு ஜிஎஸ்டி வசூல் செய்வார்கள். இதனை ஹோட்டல் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். இப்படி தவறான வழியில் ஓயோ பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. தற்போது இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூரு விமான நிலையத்தில் இந்தி மொழி நீக்கமா? அதிகாரிகள் விளக்கம்!