இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சட்டவிரோதமாக யங் இந்தியன் லிமிடெட் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ‛யங் இந்தியா' நிறுவனத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சுமார் 76% பங்குகளை வைத்திருந்ததாகவும், ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டதாகவும் பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சாட்டினார்.
மேலும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தர வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்த கடந்த 2021ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மகனுக்காக மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பவன் கல்யாணின் மனைவி!