வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, ஜோத்பூர், ஜம்மு, ஸ்ரீநகர், லே, புஜ், ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட் உட்பட சண்டிகர் மற்றும் அமிர்தசரஸில் இன்று நண்பகல் 12 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் உட்பட 11 விமான நிலையங்களின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர், லே, சண்டிகர், பிகானேர், ஜோத்பூர், ராஜ்கோட், தர்மசாலா, அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர் விமான நிலையங்கள் இதில் அடங்கும். ஜம்மு, ஸ்ரீநகர், லே உட்பட 9 விமான நிலையங்களுக்கான சேவை நண்பகல் 12 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.