ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷ் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.