பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்று ஒரு இஸ்லாமிய கட்சியின் தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் (AIMJ) தேசியத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பசுவுக்கு தேசிய விலங்கு அந்தஸ்து வழங்குவது சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இஸ்லாமிய கண்ணோட்டத்தில், பசுவின் பாலில் நோய் தீர்க்கும் குணம் உள்ளது மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், அதேசமயம் மாட்டிறைச்சி உண்பது நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
24
அகில இந்திய முஸ்லிம் ஜமாத் கட்சி தலைவர் வேண்டுகோள்
இது தொடர்பாக பேசிய மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, ''உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 'கோதான்' என்ற தலைப்பிலான திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரும் திரைப்படமும் பசுக்கள் தொடர்பானவை. இது பசுக்களின் பாதுகாப்பு, மற்றும் பராமரிப்பு தொடர்பான கதைகளைக் கொண்டிருக்கலாம். பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசுக்கும், இந்திய அரசுக்கும் நான் கோரிக்கை விடுக்கிறேன்.
34
பசு பாதுகாக்கப்பட வேண்டும்
பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டால், பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், பசுக்களைச் சுற்றி பல சர்ச்சைகள் இருப்பதைக் காணலாம். எனவே பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டவுடன் இந்தப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நான் ஒரு இஸ்லாமிய கண்ணோட்டத்தை முன்வைக்கிறேன்.
நபிகள் நாயகத்தின் (ஸல்) ஹதீஸின்படி, பசுவின் இறைச்சியில் நோயும், அதன் பாலில் சத்துகளும் உள்ளன. பசு பாதுகாக்கப்பட வேண்டும். அதன் இறைச்சியை உண்ணக்கூடாது. மாறாக அதன் பாலிலிருந்து பயனடைய வேண்டும் என்பதே நபிகள் நாயகத்தின் நோக்கமாக இருந்தது.
அதை நீங்களே உட்கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் கொடுத்து அவர்கள் குணமடைய உதவுங்கள். அனைத்து முஸ்லிம்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: பசுக்களை வளருங்கள், மாட்டிறைச்சி சாப்பிடாதீர்கள்.
பசுவின் பாலை நீங்களே குடியுங்கள், உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள், நோயாளிகளின் நலனுக்காகக் கொடுங்கள். அமைதி, ஆரோக்கியம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், முஸ்லிம்கள் பசுக்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.