மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் மும்பை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த 8 மணி நேரத்தில் 177 மிமீ மழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் மழைநீரால் நிரம்பி ஆறுகளைப் போல காட்சியளிக்கின்றன. பல்வேறூ இடங்களில் வாகனங்கள் நீரில் மூழ்கி நிற்கின்றன. பேருந்து சேவை முழுமையாக முடங்கியுள்ளது.
25
வெள்ளத்தில் மிதக்கும் மும்பை
பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மும்பையின் உயிர்நாடியாக கருதப்படும் புறநகர் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் (CSMIA) ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள. சில விமானங்கள் மாற்றி விடப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேசிய மீட்பு படையினர் மற்றும் காவலர்கள், தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
35
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தாழ்வான பகுதிகலீல் தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி நடந்து வருகிறது. மும்பை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பையிலிருந்து தொலைவில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் லாதூர் மற்றும் பீட்டில் வெள்ளம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக பாதித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் வயல்களில் வெள்ளம் புகுந்து, லட்சக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளன.
55
மீட்பு பணிகள் தீவிரம்
கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களில் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. நாந்தேட், லாதூர், பீட் மாவட்டங்களில் வெள்ளத்தில அடித்து செல்லப்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.