ரூ.8,585 கோடி கடன் நிலுவைச் செலுத்தாத எம்டிஎன்எல்! வேட்டு வைக்கும் வங்கிகள்!

Published : Jul 16, 2025, 03:20 PM IST

எம்டிஎன்எல் ஏழு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,585 கோடி கடன் தவணை செலுத்தத் தவறிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்தத் தொகை அசல் மற்றும் வட்டி இரண்டையும் உள்ளடக்கியது. நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.34,484 கோடியாக உள்ளது.

PREV
14
கடனைத் திரும்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்.

எம்.டி.என்.எல் என்ற மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம். இந்நிறுவனம் ஏழு பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவை ரூ. 8,585 கோடி என அறிவித்துள்ளது. இது அசல் மற்றும் வட்டித் தொகை இரண்டையும் உள்ளடங்கியது. எம்டிஎன்எல் நிறுவனம் பங்குசந்தைக்கு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

24
எம்டிஎன்எல் கடன் நிலுவை விவரம்

எம்.டி.என்.எல். அளித்துள்ள தகவலின்படி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவிற்குச் செலுத்த வேண்டிய தவறிய தொகை ரூ. 3,733.22 கோடி, பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு ரூ. 1,121.09 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 474.66 கோடி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு ரூ. 363.43 கோடி ஆகும்.

மேலும், யூகோ வங்கிக்கு ரூ. 273.58 கோடி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கிக்கு ரூ. 184.82 கோடி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ. 2,434.13 கோடி என மொத்தம் ரூ. 8,585 கோடி கடன் தவணை செலுத்தத் தவறிவிட்டதாக தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

34
தொலைத்தொடர்புத் துறையிலிருந்து கடன்

நஷ்டத்தில் இயங்கும் எம்.டி.என்.எல்.-இன் மொத்த கடன் நடப்பு ஆண்டின் ஜூன் 30 நிலவரப்படி ரூ. 34,484 கோடியை எட்டியுள்ளன. இந்த மொத்த கடனில் ரூ. 24,071 கோடிக்கு வாங்கிய SG பத்திரங்களும், அதற்கு வட்டி செலுத்துவதற்காக தொலைத்தொடர்புத் துறையிலிருந்து (DoT) பெற்ற ரூ. 1828 கோடி கடனும் அடங்கும்.

கடன் தவணை செலுத்தாதது ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடந்துள்ளது.

44
எம்.டி.என்.எல். வருவாய் ஈட்டும் உத்தி

சமீபத்தில், பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்துக்களைப் பணமாக்க ஏலம் அல்லாத வழியை பின்பற்றலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே சமயத்தில் ரூ. 10 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள சொத்துக்களை மட்டுமே பணமாக்கும் செயல்முறைக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தது.

எம்.டி.என்.எல். வருவாய் ஈட்டுவதற்காக நிலம், கட்டிடங்கள், சிக்னல் டவர்கள் மற்றும் ஃபைபர் இணைப்புகள் போன்ற சொத்துக்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் நேரத்தில், எம்.டி.என்.எல். பங்குகள் ரூ.49.38 விலையில் வர்த்தகமாகின. பிறகு சற்று அதிகரித்து ரூ.50.49 க்கு வர்த்தம் நடைபெற்றது. கடந்த ஒரு ஆண்டில், நிறுவனத்தின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு -5.51 சதவீதம் இழப்பை அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories