உத்தரபிரதேசத்தில் மாமியாருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, மனைவி சிவானியை கணவர் பிரமோத் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். மனைவி உயிருடன் இருந்தால் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருப்பார் என நினைத்து இந்த கொலையை செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமோத். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவானி. இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண்கள் குழந்தைகள் உள்ளனர். கணவர் மனைவிக்கு இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமே சிவானி தாய் என்பது அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
24
மாமியார் மீது மோகம்
அதாவது பிரமோத் அடிக்கடி மனைவி சிவானியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது பிரமோத்துக்கும், அவரது மாமியாருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரமோத் தனது மனைவி சிவானியுடன் இருப்பதை விட அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜோடியாக வெளியே சென்று வந்துள்ளனர். மாமியார் - மருமகன் என்பதால் யாருக்கும் பெரிய அளவில் சந்தேகம் வராததால் இவர்களுக்கு ரொம்ப வசதியாகபோனது.
34
தம்பதி இடையே சண்டை
இந்நிலையில் திடீரென கணவரின் நடவடிக்கையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து மனைவியை கண்காணித்துள்ளார். அப்போது தான் தனது தாயுடன் கணவர் கள்ளத்தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இவர்களை வசமாக சிக்க வைக்க மகள் திட்டமிட்டார். அதன்படி பிரமோத் தனது மாமியாருடன் நெருக்கமாக இருப்பதை செல்போனில் போட்டோவாக எடுத்துள்ளார். இதனையடுத்து சிவானி கணவர் பிரமோத் மற்றும் தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் பேசி சமாதானம் செய்து வைத்தனர்.
அப்படி இருந்த போதிலும் மாமியாருடனான கள்ளக்காதலை பிரமோத் கைவிடவில்லை. இதனால் சிவானிக்கும், பிரமோத்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவானி உயிருடன் இருக்கும் வரை மாமியாருடன் தொடர்பில் இருக்க முடியாது என்பதால் மனைவியை போட்டுத்தள்ள திட்டமிட்டார். அதன்படி மீண்டும் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரமோத், சிவானியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரமோத்தை தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் சிவானியின் தாய்க்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.