பயணிகள் கவனத்திற்கு, கீழ்க்கண்ட ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது:
1. அரக்கோணம் - திருப்பதி மெமு: காலை 9.15 மணிக்கு அரக்கோணத்திலிருந்து புறப்படும் மெமு ரயில், இனி திருப்பதிக்குச் செல்லாமல் திருச்சானூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
2. திருப்பதி - சென்னை சென்ட்ரல் மெமு: பிற்பகல் 1.25 மணிக்குத் திருப்பதியிலிருந்து சென்னை புறப்படும் மெமு ரயில், இனி திருப்பதிக்குப் பதிலாக திருச்சானூரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும்.
3. சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு: காலை 9.50 மணிக்குச் சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில், திருப்பதி வரை செல்லாமல் திருச்சானூர் வரை மட்டுமே செல்லும்.
4. திருப்பதி - அரக்கோணம் மெமு: பிற்பகல் 3.40 மணிக்குத் திருப்பதியிலிருந்து அரக்கோணம் புறப்படும் மெமு ரயில், இனி திருப்பதிக்குப் பதிலாக திருச்சானூரில் இருந்து புறப்படும்.