First Time Air Force for NEET Exam: கேள்வித்தாள் பாதுகாப்பு, போலி தகவல்களை கட்டுப்படுத்தல் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வைச் சுற்றியுள்ள நம்பகத்தன்மை கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி, தேசிய தேர்வு முகமை (NTA) இதுவரை இல்லாத ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கான கேள்வித்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல இந்திய விமானப்படையின் உதவி பெறப்படும்.
26
தேர்வு வரலாற்றில் முதல் முறை
நீட் தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து கேள்வித்தாள்களின் போக்குவரத்துக்கு விமானப்படை உதவி கோரப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு எழுந்த கேள்வித்தாள் கசிவு சர்ச்சை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள், பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய NTA-வை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
36
பாதுகாப்புக்கு முன்னுரிமை
தெலங்கானாவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் என்டிஏ இயக்குநர் ஜெனரல் அபிஷேக் சிங், இந்த ஆண்டு தேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கேள்வித்தாள்களின் பாதுகாப்பு முதல் தேர்வு மையங்களின் கண்காணிப்பு வரை பல அடுக்குகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தேர்வு காலங்களில் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவது வழக்கம். இதைத் தடுக்க, சமூக வலைதளங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், தவறான தகவல்களுக்கு உடனடி விளக்கம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
56
மாணவர்களுக்கு நிம்மதி தரும் நடவடிக்கை
மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை மற்றும் கல்வித் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று மாணவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
66
நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சி
விமானப்படையின் பங்களிப்பு வெறும் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமல்ல. நீட் தேர்வின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த முறை எந்த சர்ச்சையும் இல்லாமல் தேர்வு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.