இந்த அமைச்சரவை முடிவுகள் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "நமது 'அன்னதாதா'க்களான விவசாய சகோதரர்களுக்காக, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின் கீழ், காரீஃப் பருவத்துக்கு ரூ.41,534 கோடி மதிப்பிலான முழுமையான மானியத் திட்டத்துக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.
2026 காரீஃப் பருவத்துக்கான உத்தேச பட்ஜெட் தேவை சுமார் ரூ.41,533.81 கோடியாக இருக்கும். இது 2025 காரீஃப் பருவத்துக்கான பட்ஜெட்டை விட சுமார் ரூ.4,317 கோடி அதிகம். 2025-ல் இந்த மானியத்துக்காக ரூ.37,216.15 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த மானியத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், விவசாயிகளுக்கு மானிய விலையில், கட்டுப்படியான மற்றும் நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.