உயர்நிலைப் பள்ளிகளின் நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்து பொதுக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது வரை பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், இனி காலை 9.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. காலை மற்றும் மதியம் 15 நிமிடங்கள் வீதம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.