பாஜகவில் இருந்து வந்தவருக்கு பாமகவில் பெரிய பொறுப்பு.! தூக்கி கொடுத்த ராமதாஸ்! யார் இந்த ரவிராஜ்?

Published : Jun 11, 2025, 02:21 PM ISTUpdated : Jun 11, 2025, 02:22 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்கிறது. ராமதாஸ் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார், அதே நேரத்தில் அன்புமணி அவர்களை மீண்டும் நியமித்து வருகிறார். 

PREV
15
ராமதாஸ் - அன்புமணி மோதல்

பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையேயான உச்சக்கட்ட மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து, இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அன்புமணி ஆதரவு நிர்வாகிகளான மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். ஆனால் அவர்களை மீண்டும் அதே பதவியில் நியமித்து அன்புமணி உத்தரவிட்டு வருகிறார்.

25
ராமதாஸ்

இந்நிலையில், கடந்த 5ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் அவர் சென்ற பிறகு ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரத்திற்கு ராமதாஸை சந்தித்தனர்.

35
வழக்கறிஞர் பாலு நீக்கம்

தொடர்ந்து, சென்னை வந்த ராமதாஸ் 3 நாட்கள் தங்கி ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். இதனால் தந்தை மகன் இடையே சமாதானம் எட்டப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று தைலாபுரம் வந்த ராமதாஸ் நிர்வாகிகளை நீக்கம் செய்தார். கடலூர் மாநகர செயலாளர்களையும் அறிவித்த ராமதாஸ், பாமகவின் மாநில துணை தலைவராக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் மற்றும் சமூக நீதி பேரவை தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு வழக்கறிஞர் கோபுவையும், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக பூபால கண்ணனையும் நியமித்தார்.

45
46 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

இதுவரை பாமகவில் இருந்து நேற்றைய தினம் வரை 46 மாவட்ட செயலாளர்கள், 25 மாவட்ட தலைவர்கள் மற்றும் பொருளாளார் ஒருவரை பாமக நிறுவனர் ராமதாஸ் மாற்றம் செய்துள்ளார். அதேநேரத்தில் கரூர் மாவட்டச் செயலாளர் பாஸ்கரனை பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கியுள்ளார். ஆனால் அன்புமணிக்கு நீக்கும் அதிகாரம் இல்லை என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

55
யார் இந்த ரவிராஜ்?

2001-ம் ஆண்டு தேர்தலில் திருத்தணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிராஜ். 2017-ம் ஆண்டு பாமகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த நிலையில் 2022-ம் ஆண்டு மீண்டும் பாமகவுக்கே திரும்பினார். தற்போது பாமகவின் மாநில துணைத் தலைவராக ரவிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories