நீங்கள் சாப்பிடும் காய்ச்சல் மாத்திரைகள் இத்தனை ஆபத்தானதா? அதிரடியாக தடை விதித்த அரசு!

Published : Jun 26, 2025, 09:03 PM IST

பாராசிட்டமால் உள்பட 15 மருந்து, மாத்திரைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Karnataka Government Banned 15 Pharmaceutical Tablets

இன்றைய நவீன காலத்தில் புதுப் புது நோய்கள் உலா வருகின்றன. அதுவும் மழைக் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு காய்ச்சல் உடனே தொற்றி விடுகிறது. அந்த காலத்தில் எல்லாம் காய்ச்சல் ஏற்பட்டால் உணவுகள் மூலமே அதனை விரட்டியடிக்கும் வித்தையை நமது முன்னோர்கள் கையில் வைத்திருந்தனர். ஆனால் இப்போதோ சிறிது காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலும் மருந்து, மாத்திரிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

25
பாராசிட்டமால் மாத்திரை

அதுவும் ஒரு சிலர் தலைவலி, காய்ச்சலால் தினமும் உணவு போன்று மாத்திரிகளை சாப்பிட்டு வருகின்றனர். காய்ச்சல் வந்தாலே நம்மை அறியாமலேயே நாம் உச்சரிக்கும் வார்த்தை பாராசிட்டமால் மாத்திரை தான். கொஞ்சம் காய்ச்சல் வந்தாலே நமது பெற்றோர் அல்லது நண்பர்கள், ''ஒரு பாராசிட்டமால் எடுத்துக்கோ. உடனே காய்ச்சல் பறந்து விடும்'' என்று கூறுவது வழக்கம்.

அதிக மாத்திரைகள் ஆபத்தானது

பொதுவாக தினமும் அதிக மாத்திரிகளை சாப்பிடுவதே ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதுவும் மருத்துவர்கள் பரிந்துரைக்காத சில காய்ச்சல் மாத்திரைகளை நாம் தினமும் எடுத்துக்கொள்ளும்போது அது உடல்நலனை மிகவும் அபாயத்தில் தள்ளும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. 

ஆகையால் மத்திய சுகாதாரத்துறை, மருத்துவர்கள் பரிந்துரைக்காத மாத்திரைகளை கண்டறிந்து அவற்றை தடை செய்யும் பணியில் அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.

35
15 மருந்து, மாத்திரைகளுக்கு தடை

அந்த வகையில் கர்நாடக அரசு பயன்பாட்டிற்குத் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்ட பாராசிட்டமால் பிராண்ட் உட்பட 15 மருந்துகளுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. மைசூருவில் தயாரிக்கப்பட்ட பாராசிட்டமால் பிராண்ட் பொமோல்-650 (பாராசிட்டமால் மாத்திரைகள் ஐபி 650 மி.கி) மற்றும் ஓ சாந்தி கோல்ட் கிளாஸ் கும்கம் ஆகியவை பயன்பாட்டிற்குத் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்ட 15 மருந்துகளில் அடங்கும் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல்

மேலும் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் அல்ட்ரா லேபரட்டரீஸ் (தொகுதி எண்: KI124110) தயாரித்த கலவை சோடியம் லாக்டேட் ஊசி ஐபி (ஊசிக்கான ரிங்கர்-லாக்டேட் கரைசல்) மற்றும் பயோன் தெரபியூட்டிக்ஸ் இந்தியாவின் டாம் பிரான் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் MITO Q7 சிரப் (தொகுதி எண்: CHS-40170) ஆகியவையும் அடங்கும்.

45
பரிசோதனைக்கு பின் தடை

சுகாதாரத் துறையின் கீழ் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு பிரிவு கடந்த மே மாதம் பல்வேறு மருந்துகள், மாத்திரிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் மாதிரிகளை பரிசோதனை செய்தது, அப்போது இந்த 15 மருந்து பொருட்கள் பயன்பாட்டுக்கு தகுதியற்றவை என உறுதி செய்யப்பட்டது என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை சேமித்து வைக்க முடியாது

மேலும் மருந்தாளுநர்கள், மொத்த விற்பனையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் இந்த மருந்துகளையும், அழகுசாதனப் பொருட்களையும் சேமித்து வைக்கவோ, விற்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 "மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் இருப்பு இருந்தால், சம்பந்தப்பட்ட பகுதி மருந்துகள் ஆய்வாளர் அல்லது உதவி மருந்து கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த மருந்துகள் அல்லது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

55
மருத்துவர்கள் பரிந்துரை இல்லாத மாத்திரைகள் ஆபத்தானது

கர்நாடக அரசு 15 மருந்துகளுக்கு தடை விதித்ததால் அதனை பயன்படுத்தி வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பொதுவாக காய்ச்சலோ அல்லது வேறு எந்த உடல்நல பாதிப்போ மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்து, மாத்திரிகளையும் எடுத்துக் கொள்வது மிகவும் தவறான விஷயமாகும். இப்போது உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது அதிகரித்து விட்டது. இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும்.

மருத்துவர்களை அணுகுவது அவசியம்

ஆனால் நமது உயிரை காக்கும் மருந்து, மாத்திரைகளில் கலப்படம் செய்வது அல்லது போலியாக தயாரிப்பது பெரும் ஆபத்தில் தள்ளி விடும். ஆகையால் தலைவலியோ, காய்ச்சலோ அல்லது வேறு எந்த உடல்நல பாதிப்புகள் என்றால் மருத்துவரை நாடாமல் அல்லது அவரது பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே எந்த மருந்துகளையும் உட்கொள்ளாதீர்கள். நீங்கள் சாப்பிடும் மருந்து, மாத்திரைகளின் விவரங்கள் தெரியவில்லை என்றால் அருகில் உள்ள மருத்துவர்களின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories