கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! 10 பேர் துடிதுடித்து பலி! 15 பேர் படுகாயம்!

First Published | Jan 22, 2025, 1:27 PM IST

கர்நாடக மாநிலம் ஹாவேரியில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Karnataka Accident

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் அதிகாலையில் காய்கறிகளை லாரியில் ஏற்றி கொண்டு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

lorry Accident

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில் 10 ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் அலறியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 


Road Accident

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 10 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Police investigation

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுப்பற்றி தெரியவந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் சக காய்கறி வியாபாரிகள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.  இந்த சம்பவம் போலீசார் அதிகாலை நேரம் என்பதால் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்தில் சிக்கியதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos

click me!