இனி ரயில்களில் பயணிக்க ஈசியாகவே டிக்கெட் கிடைக்கும்.! இந்தியன் ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

First Published | Jan 21, 2025, 8:09 AM IST

மக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புவதால், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய டிக்கெட் கிடைக்க இந்திய ரயில்வே புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

TRAIN TICKET

ரயில் பயணத்தை விரும்பும் மக்கள்

மக்கள் ஒரு இடத்தில் ஒருந்து மற்றொரு ஊருக்கு செல்வதற்கு ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேருந்து, கார்களில் பயணம் செய்தவதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்தவதையே பெரிதும் விரும்புகிறார்கள். இதற்கு பாதுகாப்பு, கட்டணம் மற்றும் அடிப்படை வசதி முக்கிய காரணமாக உள்ளது.

இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்க விரும்புவதால் கள்ளச்சந்தையில் ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இதனால் சாதாரன மக்களுக்கு டிக்கெட் உரிய முறையில் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது.

RAILWAY RESERVATION

கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை

இதனை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் டிக்கெட் விற்பனையை கண்காணிக்க இந்திய ரயில்வே முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரயில்வே பயண சீட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு மத்திய ரயில்வே வழங்கியுள்ள புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இதன் படி இந்திய ரெயில்வே பயணசீட்டு முறையில் தொடர்ச்சியாக காணப்படும் பயணசீட்டு விற்பனை மற்றும் கருப்பு சந்தை நடவடிக்கைகள் குறிப்பாக முக்கிய விஷேச நாட்களில் (உதாரணமாக பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில்) பெரும் சவாலாக இருக்கிறது. 


TICKET TRAIN

ரயில்வே போலீசாருக்கு வழிகாட்டு நெறிமுறை

டிக்கெட் விற்பனையில்  சட்டவிரோத நடவடிக்கைகள் உண்மையான பயணிகளுக்கு சம உரிமையுடன் பயணசீட்டுகளை அணுகுவதில் தடையையும், ரெயில்வே துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கின்றன. இதற்கு பதிலளிக்க, ரெயில்வே பாதுகாப்பு படை (RPF) இந்த சிக்கலை தீர்க்கவும், ரெயில்வே சேவைகளை சீரான முறையில் அனைவருக்கும் வழங்கவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த வகையில் தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் திடீர் அதிரடி நடவடிக்கைகள், டிஜிட்டல் கண்காணிப்பின் படி மொத்தமாக முன்பதிவு செய்வதை முறையற்ற பண பரிவர்த்தனை மேலும் டிக்கெட் கவுண்டர்களில் சிசிடிவி மூலம் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAILWAY TICKET

குற்றவாளிகளுக்கு சிறை

இதுமட்டுமில்லாமல் சந்தேகத்திற்கிடமான கணக்குகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக  இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்துடன் (IRCTC) RPF இணைந்து பணி புரியவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கள்ள சந்தையில் ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை செய்வதில் ஈடுபடும் குற்றவாளிகள் ரெயில்வே சட்டத்தின் கீழ் சிறைதண்டனை வழங்கும் வகையில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். 

train ticket

AI தொழில்நுட்ப கண்காணிப்பு

AI தொழில்நுட்பத்தின் மூலம் கள்ள டிக்கெட் மற்றும் குற்றவாளிகளை கண்டறிவது, ஒரே IP முகவரியிலிருந்து அல்லது VPN களைப் பயன்படுத்தி வரும் பல முன்பதிவுகளை கண்டறிதல் மற்றும் தடுத்தல். முன்பதிவு கவுன்டர்களில் கட்டாய பயோமெட்ரிக் அங்கீகாரம் என்பது பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதலை உரிய முறையில் செயல்படுத்தினால் பயணச் சீட்டுப் பரிவர்த்தனைகள் நேர்மை மற்றும் வெளிபடைத்தன்மையோடு பரிவர்த்தனை ஆவதை உறுதி செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

Latest Videos

click me!