Facebook Scam: எலான் மஸ்க் கான்பூர்ல ஸ்கூல் கட்டுறாரா? டீச்சரிடம் ரூ.1.57 கோடி சுருட்டிய கும்பல்

Published : Mar 18, 2026, 12:07 PM IST

ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரிடம், ஃபேஸ்புக்கில் மார்க் சக்கர்பெர்க், எலான் மஸ்க் போல நடித்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. பள்ளி கட்டுவதாகவும், வேலை தருவதாகவும் ஆசை காட்டி, அவரிடமிருந்து சுமார் 1.57 கோடி ரூபாயை அந்த கும்பல் சுருட்டியுள்ளது.

PREV
15
சமூக ஊடக மோசடி

உங்க ஃபேஸ்புக்ல ஏதாவது பெரிய விஐபி பேர்ல ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்திருக்கா? அப்போ ஒரு நிமிஷம் யோசிங்க. கான்பூர்ல ஒரு ரிட்டயர்டு டீச்சருக்கு நடந்த சம்பவத்தைக் கேட்டா, உங்களுக்கே தலை சுத்திடும். உலக பணக்காரங்களான எலான் மஸ்க், மார்க் சக்கர்பெர்க் பேரச் சொல்லி, ஒரு டீச்சரை ஏமாத்தி 1.57 கோடி ரூபாயை ஒரு கும்பல் சுருட்டியிருக்கு. அவங்களுக்கு விஷயம் புரியுறதுக்குள்ள, எல்லாமே கைமீறிப் போயிடுச்சு. என்ன நடந்தது, நாம எங்க கவனமா இருக்கணும்னு முழுசா தெரிஞ்சுக்கலாம் வாங்க...

25
நட்புல ஆரம்பிச்ச ஏமாத்து வேலை

இந்த மொத்த ஏமாத்து வேலையும் ஜனவரி 2025-ல தான் ஆரம்பிச்சிருக்கு. கான்பூர்ல வசிக்கும் பாதிக்கப்பட்ட டீச்சருக்கு, ஃபேஸ்புக்ல ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்திருக்கு. அனுப்புன நபர், தன்னை ஃபேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க்னு சொல்லியிருக்கார். கொஞ்ச நாள் கழிச்சு இன்னொருத்தர் தொடர்புல வந்திருக்கார். அவர் தன்னை எலான் மஸ்கோட நெருங்கிய ஆள்னு சொல்லியிருக்கார். அந்த டீச்சரை வலைக்குள்ள இழுக்க, மோசடி கும்பல் ஒரு எமோஷனல் பிளானைப் போட்டிருக்கு. 'நாங்க கான்பூர்ல பெரிய ஸ்கூல்ஸ் திறக்கப் போறோம். உங்கள மாதிரி அனுபவமான டீச்சர் எங்ககூட வேலை செய்யணும்னு ஆசைப்படுறோம்'னு சொல்லியிருக்காங்க. இதை கேட்டதும் அந்த டீச்சருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுறதா நினைச்சுக்கிட்டு, பணத்தை அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க. இன்வெஸ்ட்மென்ட், பிராசஸிங் ஃபீஸ்னு சொல்லி லட்சக்கணக்குல பணத்தை அந்த கும்பல் கறந்திருக்கு.

35
சந்தேகம் வந்ததும், உதவி பண்றேன்னு சொல்லி மறுபடியும் மோசடி

ஒரு கட்டத்துல அந்த டீச்சருக்கு ஏதோ தப்பா நடக்குதுன்னு சந்தேகம் வந்ததும், அவங்க பேசுறதை நிறுத்திட்டாங்க. ஆனா, அந்த கும்பல் அடுத்த வலையை விரிச்சது. இந்த முறை, 'சிக்கிக்கிட்ட பணத்தை மீட்டுத் தர்ற' ஒரு நிறுவனத்தோட உறுப்பினர்னு சொல்லி ஒரு புது ஆள் வந்திருக்கார். 'உங்க பணம் கொரியர்ல வந்துட்டு இருக்கு. அதுக்கு கஸ்டம்ஸ் சார்ஜ், வண்டி ரிப்பேர் செலவு மட்டும் கொஞ்சம் கொடுங்க'ன்னு சொல்லியிருக்கார். பதற்றத்துல இருந்த அந்த டீச்சர், மறுபடியும் ஒரு பெரிய தொகையை டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க.

45
'போலி வக்கீல்' போட்ட அடுத்த ஸ்கெட்ச்

ஆன்லைன்ல புகார் கொடுக்க முயற்சி செஞ்சப்போதான், இந்த மோசடியோட உச்சகட்டமே நடந்திருக்கு. அங்க அசோக் சுரேஷ்னு ஒருத்தர் அறிமுகமாகியிருக்கார். அவர் தன்னை ஒரு வக்கீல்னு சொல்லியிருக்கார். 'உங்க பணம் ஒரு பெரிய கம்பெனியில இன்வெஸ்ட் ஆகியிருக்கு. உங்களுக்கு 2.33 கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும். ஆனா, அதுக்கு டாக்ஸ், ஸ்டாம்ப் டியூட்டி கட்டணும்'னு சொல்லி, மறுபடியும் லட்சக்கணக்குல பணத்தை வாங்கியிருக்கார்.

ஒரு வருஷமா நடந்த மோசடி

இந்த ஏமாத்து வேலை கிட்டத்தட்ட ஒரு வருஷமா நடந்திருக்கு. பிப்ரவரி 2026 வரைக்கும் திரும்பத் திரும்ப பணம் கேட்டுட்டே இருந்ததாலயும், ஒரு ரூபாகூட திரும்ப வராததாலயும், அவர் பெரிய அளவுல ஏமாந்துட்டோம்னு அந்த டீச்சருக்கு புரிஞ்சிருக்கு. இதுக்கு அப்புறம்தான் போலீஸ்ல புகார் கொடுத்திருக்காங்க. இப்போ இந்த வழக்கு விசாரணைல இருக்கு.

55
அடுத்த டார்கெட் நீங்களா இருக்கலாம்

இப்போதெல்லாம் இந்த மாதிரி ஸ்கேம் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. பெரிய பிரபலங்கள் மாதிரி போலியா மெசேஜ் அனுப்புறது, வேலை அல்லது முதலீடுக்கு ஆசை காட்டுறது, அப்புறம் பணத்தை மீட்டுத் தர்றேன்னு சொல்லி மறுபடியும் ஏமாத்துறதுனு புதுசு புதுசா வழிகளைக் கண்டுபிடிச்சு மக்களை ஏமாத்துறாங்க.

சைபர் ஸ்கேம்ல இருந்து தப்பிக்க என்ன வழி?

சக்கர்பெர்க், மஸ்க்னு எந்த பெரிய பேர்ல மெசேஜ் வந்தாலும் உடனே நம்பாதீங்க.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல வர்ற வேலைவாய்ப்பு அல்லது முதலீட்டு வாய்ப்புகளை ஒருமுறைக்கு இருமுறை சரிபாருங்க.

பிராசஸிங் ஃபீஸ், முன்பணம்னு சொல்லி யாருக்கும் பணம் அனுப்பாதீங்க.

'பணத்தை மீட்டுத் தர்றோம்'னு சொல்ற ஆளுங்ககிட்டயும் ஜாக்கிரதையா இருங்க.

கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், உடனே சைபர் ஹெல்ப்லைனுக்கு புகார் கொடுங்க.

Read more Photos on
click me!

Recommended Stories