ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சுரங்கச் சுற்றுலா திட்டம் தொடங்கவுள்ளது. JTDC மற்றும் CCL இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வடக்கு உரிமரி சுரங்கத்தில் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கங்களைப் பார்வையிடலாம்.
நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த சுரங்க சுற்றுலா திட்டம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் நடைமுறைக்கு வரப்போகிறது. இதற்காக ஜார்க்கண்ட் சுற்றுலா மேம்பாட்டுக் கழகமும் (JTDC) மற்றும் மத்திய நிலக்கரி நிறுவனமும் (CCL) ராஞ்சியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் மாநிலத்தின் சுரங்க சுற்றுலாவை கூட்டாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஐந்து வருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், விரிவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன, சுற்றுலாப் பயணிகள் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு உரிமரி சுரங்கத்தில் இருந்து, திறந்த நிலக்கரிச் சுரங்கங்கள் வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
24
சுரங்கச் சுற்றுலா குழுக்கள்
10-20 பேர் கொண்ட சிறிய குழுக்களுக்கான குழுப் பயணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை வாரத்திற்கு இரண்டு முறை திட்டமிடப்படும். ஒவ்வொரு வழிகாட்டுதல் பயணமும் சுமார் இரண்டு முதல் மூன்று மணிநேரம் நீடிக்கும். பார்வையாளர்கள் சுரங்க உபகரணங்கள், நிலத்தடி செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றைக் காண முடியும். இவை அனைத்தும் கடுமையான பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் நிபுணர் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஜார்க்கண்டின் வளமான கனிம பாரம்பரியத்தை ஒரு கல்வி சுற்றுலா அனுபவமாக மாற்றும். பார்வையாளர்கள் சுரங்க தொழில்நுட்பம், உள்ளூர் சுரங்க சமூகங்கள், வளங்களை பிரித்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
34
சுற்றுச்சூழல், மதம், கலாச்சாரம்
ஜார்க்கண்ட் அரசு பல சுரங்க சுற்றுலா சுற்றுகளையும் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல்-சுரங்க சுற்றுலா 1 மற்றும் 2, மதம் மற்றும் கலாச்சார சுற்றலா என அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பங்கேற்கும் பயணிகள் பாலனி நீர்வீழ்ச்சி, பட்ராது பள்ளத்தாக்கு மற்றும் திரு நீர்வீழ்ச்சி போன்ற அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லலாம்.
வளமான பழங்குடி பாரம்பரியம் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு அசாதாரணமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தலைநகர் ராஞ்சி தாஸம், ஹுண்ட்ரு மற்றும் ஜோன்ஹா போன்றவை போன்றவை அருவிகளுக்குப் பெயர் பெற்றவை.
"சோட்டாநாக்பூரின் ராணி" என்றும் அழைக்கப்படும் நேதர்ஹாட், ஒரு அமைதியான மலைவாசஸ்தலமாகும். இங்கு சூரிய அஸ்தமனத்தைக் காண்பது ரம்மியமான அனுபவமாக இருக்கும். பலாமு மாவட்டத்தில் உள்ள பெட்லா தேசிய பூங்கா புலிகள், யானைகள் மற்றும் பழங்கால கோட்டைகளுக்கு தாயகமாக உள்ளது. இது வனவிலங்கு பிரியர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத் தலம். பரஸ்நாத் மலை நாடு முழுவதும் உள்ள சமண பக்தர்களை ஈர்க்கிறது.