Published : Jul 21, 2025, 09:42 PM ISTUpdated : Jul 21, 2025, 09:45 PM IST
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், உடனடியாக ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.
24
ஜகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், "உடல்நலப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனைக்கு இணங்கவும், இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
34
உண்மையான கவுரவம்
இந்த காலகட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னோடியில்லாத அதிவேக வளர்ச்சியை நேரில் கண்டதும், அதில் பங்கேற்றதும் வாய்ப்பு கிடைத்ததில் திருப்தி அடைதாகவும் தன்கர் தெரிவித்துள்ளார். "நமது தேசத்தின் வரலாற்றில் இந்த மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தில் பணியாற்றியது உண்மையான கவுரவம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜகதீப் தன்கர் 2022 ஆகஸ்ட் 11 அன்று இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.