75 டன் எடை... 40 மாடி உயரம்... வெற லெவலில் ரெடியாகும் இஸ்ரோவின் அடுத்த ராக்கெட்!

Published : Aug 19, 2025, 03:23 PM IST

உஸ்மானியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், இந்தியாவின் புதிய விண்வெளித் திட்டங்கள் குறித்தும், 75,000 கிலோ எடை தாங்கும் ராக்கெட் உருவாக்கம் குறித்தும் அவர் அறிவித்தார்.

PREV
15
இஸ்ரோ தலைவர் நாராயணன்

ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்துகொண்டார். இதில், இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, தெலுங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு கௌரவ அறிவியல் முனைவர் பட்டம் வழங்கினார்.

25
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்

விழாவில் உரையாற்றிய நாராயணன், இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

“நடப்பு ஆண்டில், இந்திய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் 6,500 கிலோ எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ, NAVIC (இந்திய விண்மீன் அமைப்புடன் வழிசெலுத்தல்) மற்றும் என்1 ராக்கெட் போன்ற புதிய திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.” என நாராயணன் தெரிவித்தார்.

35
75,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்

“ராக்கெட்டின் கொள்ளளவு குறித்து உங்களுக்குத் தெரியுமா? டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட் 17 டன் எடை கொண்டது. அது, 35 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டது. ஆனால், இன்று, 75,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை அதே தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த ராக்கெட், 40 மாடி கட்டிடம் அளவிற்கு உயரமானது” எனவும் இஸ்ரோ தலைவர் குறிப்பிட்டார்.

45
55 செயற்கைக்கோள்கள்

தொடர்ந்து பேசிய நாராயணன், "இந்த ஆண்டில் தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோள் (TDS) மற்றும் இந்திய ராணுவத் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஆர் (GSAT-7R) ஆகியவற்றை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில், ஜிசாட்-7ஆர் செயற்கைக்கோள், தற்போது பயன்பாட்டில் உள்ள ஜிசாட்-7 (ருக்மிணி) செயற்கைக்கோளுக்குப் பதிலாக, இந்தியக் கடற்படைக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

55
மூன்று மடங்கு அதிகரிக்கும்

தற்போது, இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இயங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கை, அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories