Published : May 16, 2025, 01:05 PM ISTUpdated : May 16, 2025, 01:12 PM IST
பாகிஸ்தான், துருக்கி, சீனாவில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், அணுசக்தி சோதனைகளால் இது நிகழ்கிறதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதையெல்லாம் தவிடு பொடியாக்கிய நமது ராணுவம் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள், பயங்கரவாத முகாம்களை தகர்த்தெறிந்தது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு சீனா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இது இயற்கையாக நிகழ்ந்த நிலநடுக்கமா? இல்லை அணு ஆயுத சோதனையின் வெளிப்பாடா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
24
சீனா, துருக்கியில் தொடர் நிலநடுக்கம்
இந்தியாவுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த சீனாவில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 6:29 மணிக்கு ஏற்பட்டது. சீனாவின் உகான் மாகாணத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் துருக்கியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இதிலும் எந்தவித சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
இதேபோல் பாகிஸ்தானிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் கடந்த 10ம் தேதி அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பஞ்சாப் மாகாணத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஐந்து நாட்களில் பதிவான மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். இப்படியாக 3 நாடுகளிலும் ஒருசேர நிலநடுக்கம் பதிவாகி வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
34
அணுசக்தி சோதனையால் உருவான நிலநடுக்கமா?
அணுசக்தி சோதனைகள் மேற்கொண்டதால் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இது இயற்கையாக நிகழ்ந்த நிலநடுக்கம் அல்ல என்றும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ''இன்று காலை சீனாவை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. நேற்று இரவு துருக்கியை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
கடந்த 1-2 வாரங்களில் பாகிஸ்தானை சுமார் 4 ரிக்டர் அளவிலான பல நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. இது இயற்கையான நிலநடுக்கமா? அல்லது அணு ஆயுத சோதனைகளால் நிகழ்ந்ததா?'' என்று ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
''இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான், சீனா, துருக்கி ஆகிய 3 நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன. இந்த நாடுகள் அணு ஆயுத சோதனைகள் மேற்கொண்டு வருகின்றன'' என்று மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார். ஆனால் NCS இயக்குனர் O P மிஸ்ரா உட்பட இந்திய விஞ்ஞானிகள் அணுசக்தி சோதனை கோட்பாட்டை நிராகரித்துள்ளனர். இது இய்ற்கையாக நிகழந்த நிலநடுக்கம் என்றும், அணுசக்தி சோதனையால் உண்டான நிலநடுக்கம் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.