இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே மொபைல் ஆப்!

Published : Feb 05, 2025, 11:40 PM IST

SwaRail Super App: இந்திய ரயில்வேயின் புதிய சூப்பர் செயலியான ஸ்வா ரெயில், பயணிகளுக்கு ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குகிறது. டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர், பிஎன்ஆர் விசாரணைகள் மற்றும் பல சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. இந்த செயலி தற்போது பீட்டா பதிப்பில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கிறது.

PREV
17
இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே மொபைல் ஆப்!
Indian Railways

ரயில்வே அமைச்சகம் ஸ்வாரயில் என்ற புதிய சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு, ரயில்களில் உணவு ஆர்டர் செய்தல், பிஎன்ஆர் நிலையை அறிதல் போன்ற பல ரயில்வே சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதற்காக இந்த மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

27
SwaRail Super App

தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் பீட்டா பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் ஸ்வாரயில் சூப்பர் செயலி, ரயில்வே சேவைகளை நிர்வகிப்பதற்காக பல மொபைல் ஆப்களை பயன்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

37
SwaRail App

ஸ்வாரயில் சூப்பர் செயலியை ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (CRIS) உருவாக்கியுள்ளது. இது இந்திய ரயில்வேயின் அனைத்து செயலிகளின் பயன்பாட்டையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. ஸ்வாரயில் சூப்பர் செயலி மூலம், பயனர்கள் முன்பதிவு டிக்கெட், முன்பதிவு அல்லாத ஜெனரல் கோச் டிக்கெட், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை எடுக்கலாம்.

47
Railway All in One App

பார்சல் மற்றும் சரக்கு விநியோகங்களைப் பற்றி விசாரிக்கலாம். ரயில் மற்றும் PNR நிலையைக் கண்காணிக்கலாம். ரயில்களில் உணவை ஆர்டர் செய்யலாம். புகார்களையும் பதிவுசெய்யலாம்.

57
Railway super app

தற்போது, ​​இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும், ரயில் இயக்கங்கள் மற்றும் கால அட்டவணைகள் குறித்து விசாரிப்பதற்கும் பல்வேறு செயலிகளை வழங்குகிறது. ஆனால், ஸ்வாரயில் சூப்பர் செயலி ஒரு ஒருங்கிணைந்த தளமாகக் கூறப்படுகிறது. இது பல சேவைகளை ஸ்மார்ட்போன்களிலிருந்து எளிமையாக அணுக பயன்படுகிறது.

67
IRCTC apps

பயனர்கள் அனைத்து சேவைகளையும் ஒரே பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு மூலம் அணுக உதவுகிறது. IRCTC RailConnect, UTS மொபைல் ஆப் போன்ற பிற இந்திய ரயில்வே செயலிகளிலும் இதே பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தலாம். பயனர்கள் தங்கள் தற்போதைய RailConnect அல்லது UTS ஆப்பில் பயன்படுத்தும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை ஸ்வாரயில் செயலியிலும் பயன்படுத்தலாம்.

77
What is SwaRail Super App?

பாதுகாப்புக்கு m-PIN மற்றும் பயோமெட்ரிக் அம்சங்களும் ஸ்வாரயில் செயலியில் உள்ளன. இது தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் பீட்டா பயனர்களுக்குக் கிடைக்கிறது. இதை மேலும் மேம்பாடுத்த பயனர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். ரயில்வே அமைச்சகத்தின் முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு ஸ்வாரயில் மொபைல் அப்ளிகேஷன் பொதுவில் வெளியிடப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories