Indian Railway
இந்தியன் ரயில்வே விகல்ப் திட்டம்
இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ரயில்களில் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. இதன் காரணமாக பல மாணவர்கள், முதியவர்கள் அல்லது வேறு யாரேனும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இன்று நான் உங்களுக்கு ரயில்வேயின் ஒரு திட்டத்தைப் பற்றி கூறுகிறேன்.
இதன் கீழ் நீங்கள் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்தால், உங்களுக்கு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கும். அதாவது இந்தியன் ரயில்வே விகல்ப் (Vikalp) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பயணிகளுக்கு இருக்கை அல்லது பெர்த் கிடைப்பதற்கு மாற்று ரயில் விருப்பங்களை வழங்குகிறது. நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது விகல்ப் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.
Train Ticket
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்
இந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் புக் செய்த ரயிலில் டிக்கெட் இல்லை என்றால் அதே நாளில் நீங்கள் பயணிக்க வேண்டிய இடத்துக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் உறுதி செய்யப்படும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயிலில் உங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். கடைசி நேரத்திலும் சார்ட் தயாரிக்கப்பட்ட பின்பும் இந்த வெயிட்டிங் லிஸ்ட் மாறவில்லை என்றால் உங்களால் அந்த ரயிலில் பயணிக்க முடியாது.
ஆனால் நீங்கள் விகல்ப் ஆப்ஷனை முன்கூட்டியே கிளிக் செய்து இருந்தால் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் அடுத்த ரயிலில் உங்களுக்கு இருக்கை வழங்கப்பட்டு நீங்கள் பயணிக்க முடியும். நீங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்த ரயில் புறப்படும் நேரத்திலிருந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் இயக்கப்படும் ரயில்களில் நீங்கள் பயணிக்கலாம். இந்தத் திட்டத்தை அனைத்து ரயில்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
லாக்டவுன் இந்தியாவில் விதிக்கப்படுமா? HMPV வைரஸ் பாதிப்பு ; மத்திய அரசு அலெர்ட்
vikalp scheme
கூடுதல் கட்டணம் உண்டா?
ஆனால் அடுத்து புறப்படும் ரயில்களில் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்தே உங்களுக்கு இருக்கை வழங்கப்படும். உங்களுக்கு மற்றொரு ரயிலில் இருக்கை ஒதுக்கும்போது கூடுதலாக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. அதே வேளையில் நீங்கள் ஏற்கெனவே சூப்பர் பாஸ்ட் ரயிலில் புக் செய்து விட்டு, விகல்ப் திட்டத்தின் மூலம் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றம் செய்யப்பட்டால் வித்தியாச கட்டணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது.
What is the vikalp scheme?
டிக்கெட் முன்பதிவின்போது விகல்ப் திட்டத்தை எப்படி செலக்ட் செய்வது?
1. உங்கள் பெயர், பாஸ்வேர்டு கொடுத்து IRCTC இணையதளத்தை ஓப்பன் செய்யவும்.
2. பின்பு பயணத் தேதி, சேருமிடம், பயண வகுப்பு மற்றும் இருக்கை இருப்பு ஆகியவற்றை உள்ளிடவும்.
3. உங்களின் பெயர் அல்லது பயணம் செய்பவரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை உள்ளிடவும்.
4, டிக்கெட் முன்பதிவை உறுதிப்படுத்த பணம் செலுத்தவும்.
5. இப்போது திரையில் காட்டப்படும் Vikalp Scheme விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
6, மாற்று ரயில்களின் பட்டியல் திரையில் காட்டப்படும். அதே வழித்தடத்திற்கு மாற்று ரயில்களை தேர்வு செய்யலாம்.
இனி பர்சனல் லோன் வாங்குவது கஷ்டம்; சாமானிய மக்களின் அடிமடியில் கைவைத்த ஆர்பிஐ; முழு விவரம்!