ரயிலில் லோயர் பெர்த் யாருக்குக் கிடைக்கும்? முன்பதிவில் முக்கியமான கன்டிஷன்!

Published : Jan 05, 2025, 06:25 PM IST

Railway Reservation Rules for lower berth: இந்திய ரயில்வே ஒவ்வொரு பயணிகளின் தேவைகளையும் கவனித்துக்கொள்ள ரயில்வே தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது. மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் புக் செய்ய ரயில்வே முன்னுரிமை தருகிறது.

PREV
16
ரயிலில் லோயர் பெர்த் யாருக்குக் கிடைக்கும்? முன்பதிவில் முக்கியமான கன்டிஷன்!
Indian Railways

இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஒவ்வொரு பயணிகளின் தேவைகளையும் கவனித்துக்கொள்ள ரயில்வே தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணிக்கின்றனர். மூத்த குடிமக்களுக்கு ரயில்வே சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது.

26
IRCTC Ticket Booking rules

உங்கள் வீட்டில் பெற்றோருக்கு அல்லது பிற வயதானவர்கள் ரயிலில் வசதியாகப் பயணம் செய்ய ரயில்வேயில் சிறப்புச் சலுகைகள் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் முன்பதிவ செய்யும்போது லோயர் பெர்த் கிடைக்கும்.

36
Senior citizens get lower berths

மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க ரயில்வே பல விதிகளை உருவாக்கியுள்ளது. இது அவர்களின் பயணத்தை எளிதாக்குகிறது. அதில் முக்கியமானது மூத்த குடிமக்களுக்கு கீழ் பெர்த்களை முன்பதிவு செய்யும் வசதி.

ஒரு பயணி தன் மாமாவுக்கு ரயில் டிக்கெட் புக் செய்ததாகவும், அவருக்குக் கால்களில் பிரச்னை இருந்ததால் கீழ் பெர்த்துக்கு முன்னுரிமை கொடுத்ததாகவும், ஆனால் அப்போதும் ரயில்வே அவருக்கு மேல் பெர்த் கொடுத்ததாகவும் பயணி ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

46
Lower berth for senior citizens

பயணியின் ட்வீட்டுக்கு பதிலளித்த ரயில்வே, பொது ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், இருக்கை இருந்தால் மட்டுமே இருக்கை ஒதுக்கீடு கிடைக்கும், இருக்கை இல்லை என்றால் கிடைக்காது என்று கூறியுள்ளது. லோயர் பெர்த் முன்பதிவு வாய்ப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்தால், உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

56
First come, first served

பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு, லோயர் பெர்த் இருப்பைப் பொறுத்து மட்டுமே ஒதுக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகள் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் வழங்கப்படும். பொது ஒதுக்கீட்டில் முன்பதிவு செய்வதில் மனித தலையீடு இல்லை, அது தானியங்கி முறையில் செயல்படுகிறது.

66

ஆனால், லோயர் பெர்த் கிடைக்காதவர்கள், TTE-யை அணுகி லோயர் பெர்த்துக்கு கோரிக்கை வைக்கலாம். அல்லது பயணிகளே லோயர் பெர்த்துக்கு மாறிக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories