சமூக வலைத்தளங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றப்பட்டதாக பரவும் செய்திகள் தவறானவை என ரயில்வே அறிவித்துள்ளது. தற்போதுள்ள நேர அட்டவணையின்படியே முன்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரங்கள் மாற்றப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால், இதனை மறுத்முள்ள இந்திய ரயில்வே, அத்தகைய மாற்றங்கள் எதுவும் இல்லை என அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.
24
IRCTC Tatkal ticket timings
வதந்திகளை நம்ப வேண்டாம்:
தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தவறான பதிவுகள் பல ஆன்லைனில் பரவி வருவதால் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரயில்வே அதிகாரிகள் பயணிகளை வலியுறுத்தியுள்ளனர்.
34
Tatkal train ticket booking
இந்திய ரயில்வே அறிவுறுத்தல்:
டிக்கெட் முன்பதிவு விதிகள் தொடர்பான எந்தவொரு தகவலுக்கும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்பி ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பயணிகளை இந்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மூலம், தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளன என ரயில்வே விளக்கம் கொடுத்திருக்கிறது.
44
Premium Tatkal ticket timings
தற்போதைய தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம்:
இந்திய ரயில்வேயின் தற்போதைய விதிகளின்படி, பயணத் தேதியைத் தவிர்த்து, பயணத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஏசி வகுப்பு (2A/3A/CC/EC/3E) தட்கல் டிக்கெட் முன்பதிவு பயணத்தின் முந்தைய நாள் காலை 10:00 மணிக்குத் தொடங்கும். ஏசி அல்லாத வகுப்பு (SL/FC/2S) தட்கல் டிக்கெட் முன்பதிவு பயணத்திற்கு முந்தைய தினம் காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகும்.