இந்தியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடம்! எங்க இருக்கு தெரியுமா?

Published : Apr 12, 2025, 09:46 AM ISTUpdated : Apr 12, 2025, 09:51 AM IST

சூரத் டயமண்ட் போர்ஸ், உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. வைர வர்த்தக மையமாக குஜராத்தில் அமைந்துள்ள இது, பென்டகனை விட பெரியது மற்றும் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

PREV
16
இந்தியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடம்! எங்க இருக்கு தெரியுமா?
The largest office campus in the world

உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம்

உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகமான சூரத் டயமண்ட் போர்ஸ் இந்தியாவில் உள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அமைந்துள்ள இந்த மாபெரும் கட்டிடம் சுமார் ரூ.3,000 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த பிரமாண்டமான அலுவலக வளாகத்தை பிரதமர் மோடி டிசம்பர் 2023 இல் திறந்து வைத்தார்.

26
Surat Diamond Bourse

சூரத்தில் வைர வர்த்தகம்

உலகளாவிய வைர வர்த்தகத்தில் சூரத் நகரம் முக்கிய அங்கம் வகிக்கிறது. சூரத் நகரில்தான் உலகின் 90 சதவீத வைரங்கள் வெட்டப்பட்டுகின்றன. அங்கு அமைந்துள்ள இந்த வைர வர்த்தக மையம் வைரங்களை வெட்டி பாலிஷ் செய்யும் நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்கள் பணிபுரியும் இடமாக இயங்குகிறது.

36
The largest office campus in the world

சூரத் டயமண்ட் போர்ஸ்

கம்பெனிகள் சட்டம், 2013 இன் பிரிவு 8 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட, சூரத் டயமண்ட் போர்ஸ் என்ற இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் சார்பில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்திய கட்டிடக்கலை நிறுவனமான Morphogenesis இதனை வடிவமைத்துள்ளது.

46
Surat Diamond Bourse

71 லட்சம் சதுர அடி:

35 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இந்தக் வளாகம் 71 லட்சம் சதுர அடிக்கு மேல் உள்புற பரப்பைக் கொண்டுள்ளது. இந்த வளாகத்தின் ஒரு பகுதியாக 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு மண்டலம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

56
The largest office campus in the world

ஒன்றிணைந்த ஒன்பது கட்டடங்கள்:

இது 4,200 க்கும் மேற்பட்ட அலுவலகங்களை உள்ளடக்கிய 15 தளங்களைக் கொண்ட வளாகம் ஆகும். 65,000 பேர் இங்கு பணிபுரிய முடியும். இந்த வளாகத்தில் ஒன்பது கட்டடங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகள் மற்றும் நிலையான வடிவமைப்பு அம்சங்களும் கொண்டது இந்தக் கட்டிடம்.

66
Surat Diamond Bourse

பென்டகனை விடப் பெரியது:

சூரத் டைமண்ட் அலுவலக வளாகம் அமெரிக்க ராணுவத்தின் தலைமை அலுவலகமான பென்டகனை விடப் பெரியது. உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடம், உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம் என்ற கின்னஸ் உலக சாதனைகளையும் படைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories