
PM Modi: Our Government Will Always Uphold Mahavir’s Principles of Peace and Truth: மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மகாவீரின் கொள்கைகள் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு பலத்தை அளிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டர் பிரதமர் மோடி, ''அகிம்சை, உண்மை மற்றும் இரக்கத்தை எப்போதும் வலியுறுத்திய பகவான் மகாவீருக்கு நாம் அனைவரும் தலைவணங்குகிறோம். அவரது கொள்கைகள் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு பலத்தை அளிக்கின்றன'' என்றார்.
மேலும் அவர், ''மகாவீரர் போதனைகள் சமண சமூகத்தால் அழகாகப் பாதுகாக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. பகவான் மகாவீரால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி சமூக நல்வாழ்வுக்கு பங்களித்துள்ளனர்'' என்று கூறியுள்ளார். பகவான் மகாவீரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற மத்திய அரசு எப்போதும் பாடுபடும் என்று அவர் மேலும் கூறினார். ''கடந்த ஆண்டு, பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியது மிகுந்த பாராட்டைப் பெற்றது'' என்று மோடி தெரிவித்த்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
இதேபோல் மகாவீர் வழங்கிய செய்தி மனித சமூகத்தை தொடர்ந்து வழிநடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். "அனைத்து நாட்டு மக்களுக்கும் பகவான் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்கள். பகவான் மகாவீர் ஜி வழங்கிய உண்மை, அகிம்சை, இரக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் செய்திகள் மனித சமூகத்தை என்றென்றும் வழிநடத்தும். அனைவரின் நலனுக்காக பகவான் மகாவீர் ஜியை நான் பிரார்த்திக்கிறேன்" என்று அமித்ஷா எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
மேலும் பகவான் மகாவீரின் இலட்சியங்கள் நீதியான, அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க மக்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''மகாவீர் ஜெயந்தியின் புனிதமான நாளில், பகவான் மகாவீரை வணங்கி, அவரது அஹிம்சை, உண்மை மற்றும் இரக்கம் பற்றிய காலத்தால் அழியாத செய்தியை நினைவு கூர்கிறேன். அவரது இலட்சியங்கள் நீதியான, அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. இந்த புனித நாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.
26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ரூ.63,000 கோடி; மத்திய அரசு ஒப்புதல்
மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜே.பி. நட்டா
இதேபோல் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜே.பி. நட்டா, பகவான் மகாவீரின் தெய்வீக போதனைகளும் சிறந்த எண்ணங்களும் வன்முறையற்ற சமூகத்திற்கு எப்போதும் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறினார். "தியாகம், தவம் மற்றும் அமைதியின் நித்திய சின்னமான 24வது சமண தீர்த்தங்கரர் மகாவீரரின் பிறந்தநாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகத்தில் அகிம்சை, உண்மை, பிரம்மச்சரியம் மற்றும் உடைமையின்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதற்காக அவர் ஆற்றிய பணிகள் அழியாதவை. அவை யுகங்களாக முழு உலகிற்கும் மனிதகுலத்தின் நலனுக்கான பாதையை தொடர்ந்து காட்டும். நாகரிக சமூகத்தை உருவாக்குவதற்கும் உலக நலனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட மகாவீரர் ஜியின் வாழ்க்கை எப்போதும் ஊக்கமளிக்கிறது. அவரது தெய்வீக போதனைகளும் சிறந்த எண்ணங்களும் எப்போதும் வன்முறையற்ற சமூகத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்" என்று ஜேபி நட்டா கூறியுள்ளார்,
கிமு 615 இல் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து, குழந்தைப் பருவத்தில் 'வர்தமனர்' என்ற பெயர் பெற்ற மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இது ஏப்ரல் 10 அன்று கொண்டாடப்படும் என்று மகாவீரர் சம்வத் கூறுகிறது. உலகில், குறிப்பாக இந்தியாவில் சமண மதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 'அஹிம்சா பர்மோ தர்மம்' அல்லது அகிம்சையின் முக்கிய போதனை இன்று உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
திகார் சிறைக்குச் செல்லும் தஹாவூர் ராணா; ரகசிய விசாரணைக்கு ஏற்பாடு!