Indian Army to procure next-generation air defense system: பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் முப்படைகளும் தயாராக உள்ளது. இந்நிலையில், அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு முடிவு செய்துள்ளது.
24
Indian Army
அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு
அதாவது பாகிஸ்தானுடன் நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், 6 கிமீ வரையிலான தூரத்தில் எதிரி போர் விமானங்கள், விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இடைமறித்து அழிக்கக்கூடிய மற்றொரு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கு இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''48 ஏவுதள கருவிகள், இரவிலும் ராணுவ செயல்பாடுகளை மேற்கொள்ளும் 48 தொழில்நுட்பங்கள், 85 ஏவுகணைகள் மற்றும் மிக குறுகிய தொலைவு இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பைஒ கொள்முதல் செய்வதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கப்பட்டன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
34
Next-Generation Air Defense System
அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தப்படும்
அனைத்து வானிலை வான் பாதுகாப்பு அமைப்பு, நெரிசல் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் பாரா-டிராப் செய்யக்கூடிய திறன் கொண்டதாக இருக்க வேண்டும், இது சமவெளிகள் மற்றும் பாலைவனங்கள் முதல் சுமார் 4,500 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதிகள் வரை அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை கால நிலையிலும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படும். அதாவது மைனஸ் 30 டிகிரிக்கு கீழ் உள்ள கடுங்குளிா் நிலவும் காலநிலை மற்றும் 50 டிகிரிக்கு மேலான வெப்பநிலை நிலவும் காலநிலையிலும் செயல்படும். மேலும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு குறைந்தபட்சம் 500 மீட்டாரிலும், அதிகபட்சமாக 6,000 மீட்டா் வரையிலான உயரத்திலும் செயல்படும். போா்விமானம், ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் என எவ்வித தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.