43.4 பில்லியன் டாலர் நிதியுதவி
IMF நிர்வாகக் குழு மே 9 அன்று பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்து, தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதியை மதிப்பாய்வு செய்யவும், மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதியின் கீழ் நிதியுதவிக்கான கோரிக்கையை பரிசீலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு காலநிலை மீள்தன்மை திட்டத்தின் கீழ் 1.3 பில்லியன் டாலர் நிதியை ஐ.எம்.எஃப் வழங்க இருக்கிறது. டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) பாகிஸ்தானுக்கு 764 பொதுத்துறை கடன்கள், மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளது. மொத்தம் 43.4 பில்லியன் டாலர் நிதியுதவியை பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது.