இந்தியாவுக்கு டாப் ரேங்க்! ஆசியாவின் சிறந்த பணிச்சூழல் பட்டியலில் முதலிடம்!

Published : Sep 01, 2025, 04:31 PM IST

இந்தியா ஆசியாவிலேயே சிறந்த பணிச்சூழலைக் கொண்ட நாடாக 'கிரேட் பிளேஸ் டூ ஒர்க்' அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த 100 நிறுவனங்களில் 48 இந்தியாவில் செயல்படுகின்றன, பணியாளர் அனுபவத்தில் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

PREV
13
ஆசியாவிலேயே சிறந்த பணிச்சூழல்

ஆசியாவிலேயே சிறந்த பணிச்சூழலைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக, 'கிரேட் பிளேஸ் டூ ஒர்க்' (Great Place To Work) அமைப்பு வெளியிட்ட 2025ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள சிறந்த 100 நிறுவனங்களில், 48 பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.

சிறந்த 100 பெரிய நிறுவனங்களில் 48 நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன. இதேபோல், இடைநிலை நிறுவனங்கள் பிரிவில் 12 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த நிறுவனங்கள், பணியிட கலாசாரம் மற்றும் பணியாளர் அனுபவத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன என்று அறிக்கை கூறுகிறது.

23
இந்தியப் பணியாளர்களின் அனுபவம்

இந்த அறிக்கையானது, 32 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த பணியிடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், சாதாரண நிறுவனங்களைவிட அதிக சதவீத பணியாளர்கள் நேர்மறையான அனுபவங்களைப் பெற்றதாகக் கூறியுள்ளனர்.

91% பணியாளர்கள் தங்கள் பணியை பாதிக்கும் முடிவுகளில் தாங்கள் ஈடுபடுத்தப்படுவதாக உணர்கின்றனர். இது கடந்த ஆண்டைவிட 86% அதிகம்.

86% பணியாளர்கள் தங்கள் மேலாளர்களால் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர். இது கடந்த ஆண்டைவிட 83% அதிகம்.

93% பணியாளர்கள், வயது, பாலினம், பதவி, இனம் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தாங்கள் நேர்மையாக நடத்தப்படுவதாக உணர்கின்றனர்.

33
முன்னணி நிறுவனங்களின் அலுவலகம்

இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற சில முக்கிய இந்திய நிறுவனங்களில் Novartis, Schneider Electric, Ericsson, Visa மற்றும் NVIDIA ஆகியவை அடங்கும்.

'கிரேட் பிளேஸ் டூ ஒர்க்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் சி. புஷ் கூறுகையில், "இந்த முன்னணி நிறுவனங்கள், சமூகங்களை வலுவாக்கும், நாடுகளை வளமாக்கும் மற்றும் உலகை சிறந்த இடமாக மாற்றும் பணியிடங்களை உருவாக்குகின்றன" என்றார்.

இந்தியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு குறித்து, 'கிரேட் பிளேஸ் டூ ஒர்க் இந்தியா' தலைமை நிர்வாக அதிகாரி பல்பிர் சிங், "இந்த பட்டியலில் பல இந்திய நிறுவனங்களின் பிரதிநிதித்துவம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இது இந்த பணியிடங்களால் வளர்க்கப்பட்ட நியாயம் மற்றும் சிறப்பான கலாச்சாரத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும்" என்று கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories