100% வரி... டிரம்ப்பின் மிரட்டலை சமாளிக்க இந்தியாவின் மாஸ்டர் பிளான்!

First Published | Jan 22, 2025, 8:15 PM IST

Trump trade agenda: இந்தியா உள்பட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் மீது 100% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கான எதிர்வினையாக இந்திய அரசு சில திட்டங்களை பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

India-US trade policy

இந்தியா உள்பட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் மீது 100% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கான எதிர்வினையாக இந்திய அரசு சில திட்டங்களை பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Donald Trump and Modi

டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேறினால், 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதனால் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியா மாற்றுத் திட்டங்களை வகுத்துள்ளது.


India-US Trade

அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க இந்தியா பரிசீலித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சோயாபீன்ஸ், பால், வாகனங்கள், மருத்துவக் கருவிகள், விமானங்கள், மின்சாதனங்கள், ஜவுளிகள் ஆகியவற்றை அமெரிக்காவிடம் இருந்து அதிகமாக வாங்க இந்தியா பரிசீலிக்கிறது. ரசாயனங்களையும் அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

Donald Trump on 100% tax

அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்வதைக் கைவிடப் போவதில்லை என இந்தியா அறிவிக்கலாம். வர்த்தத்தில் பிரிக்ஸ் கரன்சியை கொண்டுவர இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே இது தொடர்பாக பிரிக்ஸ் அமைப்புக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் டாலர் வர்த்தகத்தை எதிர்க்கும் நிலையில் இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும்.

US import duty

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்றப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் அங்கு உள்ள இந்தியர்களும் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்களை இந்திய அரசே நாடுதிரும்ப ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

India and United States

இந்தியா - அமெரிக்கா இடையே தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, அதன் மூலம் இருதரப்புக்கும் சாதகமான முடிவுகள் எட்டப்படலாம். குறிப்பாக இறக்குமதி வரியை உயர்த்துவதைக் கட்டுப்படுத்த பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்கலாம். என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!