பீகார் தேர்தலில் கெத்து காட்டிய பெண்கள்! ஆண்களை விட 9% அதிக வாக்குப்பதிவு!

Published : Nov 12, 2025, 02:41 PM IST

பீகார் சட்டமன்றத் தேர்தலில் 66.91% வாக்குப்பதிவு பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆண்களின் வாக்குப்பதிவு விகிதம் 62.8% ஆக இருக்க, பெண்கள் வாக்குப்பதிவு விகிதம் 71.6% ஆக உயர்ந்து, இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

PREV
14
பீகார் தேர்தலில் பெண்களின் சாதனை

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 66.91% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே மிக உயர்ந்த அளவாகும் என இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது.

ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்ததே இந்த வரலாற்றுச் சாதனைக்கு முக்கிய காரணம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

24
பெண்களின் வாக்குப்பதிவு அதிகரிப்பு

பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பெண் வாக்காளர் விகிதம் 71.6% ஆக உயர்ந்துள்ளது. ஆண்களின் மொத்த வாக்குப்பதிவு விகிதம் 62.8% ஆக இருக்க, பெண்களின் வாக்குப்பதிவு விகிதம் 71.6% ஆக உள்ளது. ஆண்களை விட பெண்கள் 9 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

நவம்பர் 6ஆம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் பெண்கள் 69.04% வாக்களித்தனர், ஆண்கள் 61.56% மட்டுமே வாக்களித்தனர்.

நவம்பர் 11ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பெண்களின் வாக்குப்பதிவு மேலும் அதிகரித்து 74.03% ஆக இருந்தது. ஆண்களின் வாக்குப்பதிவு 64.1% ஆகப் பதிவானது.

34
சாதனைகளை முறியடித்த தேர்தல்

2015 சட்டமன்றத் தேர்தலில்கூட, 60.48% பெண்களும், 53.32% ஆண்களுமே வாக்களித்தனர். 2000ஆம் ஆண்டுத் தேர்தலில், ஆண்கள் 70.71% வாக்களித்தபோது, பெண்கள் 53.28% மட்டுமே வாக்களித்திருந்தனர். அந்த நிலையை மாற்றி, இந்தத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமாக அதிகரித்துள்ளது.

முசாபர்பூர், சமஸ்திபூர் உட்பட 10 மாவட்டங்களில் 70%க்கும் அதிகமாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மாவட்டங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, அதிகபட்சமாக கதிஹாரில் 78.84% வாக்குகள் பதிவாகியுள்ளன. கிஷன் கஞ்சில் 78.15%, பூர்னியாவில் 76.14% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

44
தேர்தல் ஆணையரின் பாராட்டு

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகார் பெண் வாக்காளர்களைப் பாராட்டினார். "பெண் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது," என்றும், "இந்த வெளிப்படையான, அமைதியான தேர்தல் இந்தியா முழுமைக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நடைபெறவுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories