மாதம் ரூ.9 ஆயிரம் சேமித்தால் ரூ.50 லட்சம் கிடைக்குமா? - இப்போதே கணக்குத் தொடங்குவது எப்படி?

Published : Mar 29, 2026, 12:12 PM IST

சிறு சேமிப்பு, உங்கள் மகளின் நாளைய கனவுகளுக்குப் பலமாக அமையும். எந்தவொரு தபால் நிலையம் அல்லது பொதுத்துறை வங்கிகளிலும் எளிய ஆவணங்களைக் கொண்டு இந்தக் கணக்கைத் தொடங்கி உங்கள் மகளின் எதிர்காலத்தை உறுதி செய்யலாம்.

PREV
15
Sukanya Samriddhi Yojana

இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகப் பெற்றோர்கள் சேமிப்பதை ஊக்குவிக்க 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்'என்ற திட்டத்தின் கீழ் இச்சேமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தற்போது சந்தையில் உள்ள மற்ற சிறுசேமிப்புத் திட்டங்களை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் பெயர் தான், செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.

25
செல்வமகள் சேமிப்புத் திட்டம் நன்மைகள்

ஒரு பெண் குழந்தை பிறந்த தேதியிலிருந்து 10 வயது நிறைவடையும் வரை அவரது பெயரில் இத்திட்டத்தைத் தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்க முடியும். இக்கணக்கை அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தொடங்கலாம்.

35
சுகன்யா சம்ரிதி யோஜனா விளக்கம்

இத்திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ₹250 முதல் அதிகபட்சமாக ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலம் என்பது கணக்குத் தொடங்கிய தேதியிலிருந்து 21 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் வரை மட்டுமே நீங்கள் பணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள 6 ஆண்டுகளுக்குத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் வட்டி கணக்கிடப்படும்.

45
How to open SSY account in Tamil Nadu

தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. கூட்டு வட்டி முறையில் லாபம் கணக்கிடப்படுவதால், நீண்ட காலத்தில் ஒரு பெரிய தொகையை சேமிக்க முடியும். மிக முக்கியமாக, இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும், முதிர்வின் போது கிடைக்கும் வட்டி மற்றும் மொத்தத் தொகைக்கும் வரி கிடையாது.

55
Sukanya Samriddhi Yojana Tamil details

பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு, அவரது உயர்கல்விச் செலவுக்காகச் சேமிப்பில் உள்ள தொகையில் 50%- பெற்று கொள்ளலாம். திருமணத்தின் காரணமாகக் கணக்கை முடிக்க விரும்பினால், 18 வயது பூர்த்தியான பிறகு திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்போ அல்லது 3 மாதங்களுக்குப் பின்போ கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories