Train Ticket Booking
ரயில் டிக்கெட் முன்பதிவு
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர். தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகும் நீங்கள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
How to change boarding station?
போர்டிங் ஸ்டேஷன் மாற்றலாம்
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் முன்பதிவு செய்து கன்பார்ம் டிக்கெட் பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் பயணம் செய்ய வேண்டிய தேதியில் உங்களுக்கு தாம்பரத்தில் ஒரு வேலை இருக்கிறது. ஆனால் அந்த வேலையை முடித்து ரயிலை பிடிக்க நீங்கள் அவசரம் அவசரமாக எழும்பூர் செல்ல வேண்டியதில்லை. தாம்பரத்திலேயே அந்த ரயிலில் ஏறிக் கொள்ளலாம். ஏனெனில் டிக்கெட் புக் செய்த பிறகும் நீங்கள் ஏற வேண்டிய ரயில் நிலையத்தை எழும்பூரில் இருந்து தாம்பரத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.
ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. இனி எல்லாமே ஒரே இடத்தில்.. இந்திய ரயில்வேயின் புதிய வசதி!
Indian Railway
போர்டிங் ஸ்டேஷனை எப்படி மாற்றுவது?
1. நீங்கள் IRCTC அதிகாரப்பூர்வ வலைத்தளமான irctc.co.in இணையதளத்தை ஓப்பன் செய்யுங்கள்.
2. பின்பு உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்டு ஓப்பன் செய்யுங்கள்.
3.பின்பு எனது கணக்கு (My Account) எனது பரிவர்த்தனைகள் (My Transaction) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4. பின்னர் டிக்கெட் வரலாறு (Transaction History) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் புக் செய்த டிக்கெட்டை தேர்வு செய்யவும்.
5. இதில் போர்டிங் பாயிண்டை மாற்று (Change Boarding Point )என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் புக் செய்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள ஸ்டேஷன்கள் கொண்ட பட்டியல் தோன்றும்.
6. இதில் நீங்கள் ஏற வேண்டிய ரயில் நிலையத்தை கிளிக் செய்து, OKகொடுத்தால் போர்டிங் ஸ்டேஷன் மாறி விடும்.
7. பின்பு போர்டிங் ஸ்டேஷன் மாற்றப்படதற்கான செய்தி உங்கள் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும்.
Boarding Station Change
எத்தனை முறை மாற்றலாம்?
நீங்கள் புக் செய்த ரயில் புறப்படுவதற்கு 4 நேரத்துக்கு முன்பு வரை போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முன்பு ரயில் புறப்படுவதற்கு 24 நேரத்துக்கு முன்பு வரை மட்டுமே போர்டிங் ஸ்டேஷனை மாற்றும் வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கூட போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
ரயில்வேயின் புதிய வாட்ஸ்அப் சேவை! ஒரே கிளிக்கில் முழுமையான தகவல்கள்!